இந்தியா

1.மேற்குவங்கத்தின் கோடைக்காலத் தலைநகரமாக இருந்து வந்த டார்ஜிலிங்கில் கடந்த 45 ஆண்டுகளுக்குப்பின் அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் நடைபெற்றுள்ளது.
2.இந்தியாவின் முதல் சரக்கு முனையம் / சரக்கு கிராமம் வாரணாசியில் அமைக்கப்பட உள்ளது.தொழிற்பேட்டைகளில் முழுக்க முழுக்க உற்பத்தி
தொழிற்சாலைகள் இருப்பது போன்று, இங்கு சரக்குகளை கையாளக்கூடிய வாகன போக்குவரத்தாளர்கள் மட்டுமே இருப்பார்கள்.
3.தேசிய தாய்ப்பால் வங்கி மற்றும் பாலூட்டும் ஆலோசனை மையம் Vatsalya – Maatri Amrit Kosh , புதுடெல்லி லேடி ஹர்டிங்கே மருத்துவ கல்லூரியில் துவங்கப்பட்டுள்ளது.


உலகம்

1.ஜார்ஜியா நாட்டின் பதுமி நகரில் நடைபெற்ற லிட்டில் மிஸ் யுனிவர்ஸ் போட்டியில், ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 12 வயது சிறுமி பத்மாலயா நந்தா பட்டத்தை வென்றுள்ளார்.
2.அமெரிக்காவின் கொலம்பசில் உள்ள ஓகியோ பல்கலைக்கழக பேராசிரியர் தலைமையிலான குழு, சூரியனை விட இரு மடங்கு பெரிதாகவும், வெப்பமாகவும் உள்ள கெல்ட் – 9 பி என்ற கிரகத்தை கண்டுபிடித்துள்ளனர்.
3.முதன்முறையாக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இங்கிலாந்தை சேர்ந்த Ian Toothill எவரெஸ்ட் சிகரத்தை அடைந்துள்ளார்.


விளையாட்டு

1.பிரெஞ்சு ஓபன் ஆண்கள் ஒற்றையர் போட்டியில் ஸ்பெயினின் ரபேல் நடால், சுவிட்சர்லாந்து வீரர் வாவ்ரிங்காவை வீழ்த்தி 10-வது முறையாக பிரெஞ்ச் ஓபன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார்.கிராண்ட் ஸ்லாம் டென்னிசில் நடால் வென்ற 15-வது பட்டம் இதுவாகும்.


இன்றைய தினம்

1.1983 – பயனியர் 10 சூரியக் குடும்பத்தைத் தாண்டிய முதலாவது விண்கப்பல் ஆனது.

 

– தென்னகம்.காம் செய்தி குழு