தமிழகம்

1.தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கிருஷ்ணா நதிநீர் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த நேற்று ஆந்திர தலைநகர் அமராவதிக்கு சென்றார்.அங்கு அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடன் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேச்சுவார்த்தை நடத்தினார்.இந்த பேச்சுவார்த்தைக்கு பின்  2.5 டிஎம்சி தண்ணீர் வழங்க ஆந்திர அரசு சம்மதம் தெரிவித்துள்ளது.மேலும் தெலுங்கு கங்கை நீர் பங்கீடு தொடர்பாக தமிழக முதல்வர் ஆந்திரா செல்வது இதுவே முதல் முறையாகும்.
2.தமிழ் திரையுலகத்தின் மூத்த இசைமேதையும் பின்னணிப் பாடகருமான டி.எம்.சவுந்தரராஜனை கவுரவிக்கும் வகையில் இவர் நினைவாக மத்திய அரசு ரூ.5 மதிப்பில் தபால்தலை ஒன்றை வெளியிட்டுள்ளது.


இந்தியா

1.இந்திய தேசியக் கொடி பதிக்கப்பட்ட மிதியடிகளை விற்பனை செய்யக் கூடாது என்று வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா விடுத்த எச்சரிக்கைக்கு அமேஸான் அடிபணிந்து அதை தனது அமேஸான் இணையதளத்தின் விற்பனைப் பட்டியலில்  இருந்து நீக்கியுள்ளது.
2.கிரீன்பீஸ் இந்தியா என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் நடத்திய ஆய்வில் காற்று மாசுபாடு காரணமாக இந்தியாவில் ஆண்டுக்கு 12 லட்சம் பேர் உயிரிழப்பதாகவும், நாட்டிலேயே காற்று மாசு அதிகமாக உள்ள நகரம் தில்லி என்றும் ஆய்வில் தெரிவித்துள்ளது.
3.டில்லி நகரின் மக்கள் தொகை உலகில் உள்ள 10 நாடுகளின் மக்கள் தொகையை தாண்டி விட்டது என ஐக்கிய நாடுகள் சர்வே தெரிவித்துள்ளது. 2014-ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி புதுடில்லியின் மக்கள் தொகை 2.5 (25 மில்லியன்) கோடி ஆக இருந்தது.
4.மும்பையில் உள்ள மாலேகான் கப்பல் கட்டும் தளத்தில் இருந்து ஸ்கார்ப்பீன் ரக 2-ஆவது நீர்முழ்கிக் கப்பலான “காந்தேரி’ நாட்டுக்கு நேற்று அர்ப்பணிக்கப்பட்டது.இந்த நீர்மூழ்கிக் கப்பல், இந்த ஆண்டு இறுதியில் கடற்படையில் சேர்க்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
5.தில்லியில் பிரதமர் மோடி, கென்ய அதிபர் உஹுரு கென்யாட்டா முன்னிலையில் கென்யாவின் விவசாயத் துறை வளர்ச்சிக்காக, 100 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.683 கோடி) கடனுதவி வழங்குவதற்கான ஒப்பந்தம் கடந்த ஜனவரி 11-ம் தேதி கையெழுத்தானது.
6.டாடா சன்ஸ் குழுமத்தின் புதிய தலைவராக தமிழகத்தை சேர்ந்த நடராஜன் சந்திரசேகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.இவர் நாமக்கல்லை அடுத்த மோகனூரைச் சேர்ந்தவர் ஆவார்.
7.இந்தியாவின் ஏர் இந்தியா விமான நிறுவனம் வரும்  ஜனவரி 18-ம் தேதி முதல் எக்கனாமி வகுப்பில் 3-வது வரிசையிலிருக்கும் 6 இருக்கைகள் பெண்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.


உலகம்

1.மனிதர்களை போன்ற தோற்றமும், முகபாவனைகளும் காட்டும் ரோபோவை சீன அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலையின் சின் ஷியாபிங் தலைமையிலான இன்ஜினியர்கள் குழு தயாரித்து, செயல்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளது.இந்த ரோபோவுக்கு ‘ஜியா ஜியா’ என பெயர் சூட்டியுள்ளனர்.
2.வங்கதேசத்தில், டாக்டர்கள் மருந்து சீட்டுகளில் தங்கள் கைகளால் எழுதக்கூடாது. மருந்து விவரங்களை டைப் அடித்து கொடுக்க வேண்டும் என்று அந்த நாட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
3.உலகின் தலைசிறந்த மியூசியங்களில் ஒன்றான மேடம் துஸாட்ஸ் மெழுகு மியூசியத்தின் கிளை, இந்திய தலைநகர் டெல்லியில் வருகின்ற ஜூன் மாதம் திறக்கப்பட உள்ளது.இது மேடம் துஸாட்ஸ் மியூசியத்தின் 23-வது கிளையாகும்.
4.சிகாகோவில் நடைபெற்ற அமெரிக்காவின் தற்போதைய அதிபர் பராக் ஒபாமாவின்  கடைசி பிரியாவிடை உரையில் அமெரிக்கர்களுக்கு கண்ணீருடன் ஒபாமா நன்றி தெரிவித்தார்.பராக் ஒபாமாவின் பதவிக்காலம் வரும்  ஜனவரி 20ம் தேதியுடன் முடிவடைவது குறிப்பிடத்தக்கது.
5.சிகாகோவில் தனது கடைசி உரை முடிந்த பின்னர் அமெரிக்க அதிபர்களுக்கான பிரத்யேக “ஏர் போர்ஸ் ஒன்“ எனும் விமானத்தில் வெள்ளை மாளிகை திரும்பினார். இந்த விமானத்தில் அவர் பயணம் செய்வது இதுவே கடைசிமுறை ஆகும்.


இன்றைய தினம்

1. இன்று விண்வெளியில் பறந்த முதல் இந்தியர் ராகேஷ் ஷர்மா பிறந்த தினம்.இவர் பிறந்த தேதி 13 ஜனவரி 1949.
2.மிக்கி மவுஸ் கார்ட்டூன் துணுக்குகளாக முதன் முதலாக வெளிவரத்தொடங்கிய நாள் 13 ஜனவரி 1930.
3.ஹென்றி போர்ட் பிளாஸ்டிக்கினால் ஆன தானுந்துக்கான காப்புரிமம் பெற்ற நாள் 13 ஜனவரி 1942.

 

– தென்னகம்.காம் செய்தி குழு