Daily-Current-Affairs

இந்தியா

1.இந்தியா முழுவதும் ஒரு ரூபாய்க்கு ஒரு ஜிபி இன்டர்நெட் டேட்டா பெறும் திட்டத்தை பிஎஸ்என்எல் நிறுவனம் துவக்கியுள்ளது.இந்த திட்டத்துக்கு ‘அன்லிமிடெட் வயர்லைன் பிபி 249’ என பெயரிட்டுள்ளது.
2.ஒலிம்பிக்கில் இரண்டு முறை பதக்கம் வென்ற  மல்யுத்த வீரர் சுஷில் குமார் , மல்யுத்த வீராங்கனை அகிலா தோமர், சுஷிலின் பயிற்சியாளர் யஷ்விர் சிங் ஆகியோருக்கு இந்திய மல்யுத்த சங்கம் (டபிள்யூ.எஃப்.ஐ) பத்ம பூஷண் விருதுக்கு பரிந்துரைத்துள்ளது.
3.டெல்லி – மும்பை வழித்தடத்தில் டால்கோ ரயில் மூன்றாவது முறையாக சோதனை செய்யப்பட்டது. உத்தரப் பிரதேச மாநிலம் பரேலி-மொராதாபாத், மற்றும் பால்வால் – மதுரா ஆகிய இடங்களில் ஏற்கனவே சோதனை நடைபெற்றது.இந்த ரயில் ஸ்பெயினில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது.

விளையாட்டு

1.பிரேசில் நாட்டின் ரியோ நகரில்  நடைபெற்று வரும் மாற்றுத் திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீராங்கனை தீபா மாலிக் குண்டு எறிதல் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றுள்ளார்.இதன் மூலம்  பாரா ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார்.
2.நியூயார்க்கில் நடைபெற்ற அமெரிக்க ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் ஆண்கள் இரட்டையர் போட்டியில் இங்கிலாந்தின் ஜிம்மி முர்ரே மற்றும் பிரேசிலின் புர்னே சோரஸ் இணை சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்கள்.இவர்கள்  தன்னை எதிர்த்து விளையாடிய ஸ்பெயினின் பேப்லோ கரினோ புஸ்டோ மற்றும் குல்லர்மோ கார்சியா லோபஸ் இணையை 6-2, 6-3 என்ற செட் கணக்கில் தோற்கடித்து சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்கள்.பெண்கள் இரட்டையர் போட்டியில் செக் குடியரசின் லுசி சபரோவா மற்றும் அமெரிக்காவின் பெத்தானி மேடக் சாண்ட் இணை சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்கள்.இவர்கள் தன்னை எதிர்த்து விளையாடிய பிரான்சின் கரோலினா கார்சியா மற்றும் கிறிஸ்டினா மெடினோவிக் இணையை  2-6, 7-6, 6-4 என்ற செட் கணக்கில் தோற்கடித்து சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்கள்.கலப்பு இரட்டையர் போட்டியில் குரேசியாவின் மேட் பெவிக் மற்றும் ஜெர்மனியின் லாரா செகிமண்ட் இணை சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்கள்.இவர்கள் தன்னை எதிர்த்து விளையாடிய அமெரிக்காவின் ராஜிவ் ராம் மற்றும் கோகோ வண்டேவேகே இணையை 6-4, 6-4 என்ற செட் கணக்கில் தோற்கடித்து சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்கள்.
3.மேற்கிந்திய தீவுகளுக்காக விளையாடும் கிரிக்கெட்  வீரர் கிறிஸ் கெய்ல் “Six Machine: I Don’t Like Cricket … I Love It” எனும் சுயசரிதை புத்தகத்தை எழுதியுள்ளார்.