இந்தியா

1.மும்பை மாநகராட்சியின் எதிர்க்கட்சி தலைவராக தமிழர் ரவிராஜா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவரது சொந்த ஊர் ராஜபாளையம் ஆகும்.
2.தொலைத்தொடர்பு தகராறுகள் தீர்வு மற்றும் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் தலைவராக ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ஷிவா கீர்த்தி சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.
3.கேரள பள்ளிகளில் மலையாளம் மொழி கற்பிப்பதை கட்டாயமாக்கும் வகையில் அம்மாநில அரசு கொண்டு வந்துள்ள அவசர சட்டத்திற்கு ஆளுநர் சதாசிவம் கையெழுத்திட்டுள்ளார்.
4.காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய மந்திரி அகிலேஷ் தாஸ் குப்தா உடல்நலக் குறைவால் நேற்று காலமானர்.
5.மத்திய பிரதேசத்தில் மே 1-ந்தேதி முதல் பிளாஸ்டிக் மற்றும் பாலித்தீன் பைகளுக்கு முழுமையான தடை விதிப்பதாக மாநில மந்திரி நரோத்தம் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
6.அம்பேத்கரின் 125-வது ஜெயந்தி விழாவையொட்டி விசாகப்பட்டினத்தில் கின்னஸ் சாதனைக்காக 7 ஆயிரம் சிறுமிகள் பங்கேற்ற குச்சிபுடி நடன நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியை முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு தொடங்கி வைத்தார்.


உலகம்

1.ஐ.நா. சபையின் இளம் அமைதித் தூதராக பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலா யூசப்சாய் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.ஐ.நா. பொதுச் செயலாளர் அண்டோனியோ கட்ரஸ் அவருக்கு பட்டத்தை வழங்கி பெருமைப்படுத்தியுள்ளார்.


இன்றைய தினம்

1.இன்று தமிழகத் திரைப்படப் பாடலாசிரியர், கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பிறந்த தினம்.இவர் பிறந்த தேதி 13 ஏப்ரல் 1930.
2.காமராஜர் தமிழ்நாடு முதல்வரான நாள் 13 ஏப்ரல் 1954.
3.இயன் ஃபிளமிங் தனது முதலாவது ஜேம்ஸ் பொண்ட் புதினத்தை வெளியிட்ட நாள் 13 ஏப்ரல் 1953.
4.அப்பல்லோ 13 விண்கலத்தில் ஆக்சிஜன் தாங்கி வெடித்த நாள் 13 ஏப்ரல் 1970.
5.ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது வணிக செய்மதி வெஸ்டார் 1 ஏவப்பட்ட நாள் 13 ஏப்ரல் 1974.
6.இலங்கையில் சுயாதீன தொலைக்காட்சி சேவை ஆரம்பிக்கப்பட்ட நாள் 13 ஏப்ரல் 1979.
7.கூகிள் காலண்டர் வெள்ளோட்டம் விடப்பட்ட நாள் 13 ஏப்ரல் 2006.
8.இன்று எக்குவடோர் நாட்டில் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது.

 

– தென்னகம்.காம் செய்தி குழு