Current-Affairs-Updates

இந்தியா

1.வங்கதேசம், பாகிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகளில் இருந்து புகலிடம் தேடி வரும் அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க வகை செய்யும் மசோதா குறித்து பரிசீலிக்க 10 எம்.பி.க்களைக் கொண்ட கூட்டுக் குழுவை மாநிலங்களவை அமைத்துள்ளது.
2.திருத்தங்களுடன் கூடிய சரக்கு – சேவை வரி (ஜிஎஸ்டி) மசோதாவானது அஸ்ஸாம் சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.இதன் மூலம் அதிமுக்கியத்துவம் வாய்ந்த ஜிஎஸ்டி மசோதாவை மத்திய அரசுக்குப் பிறகு நிறைவேற்றிய முதல் மாநிலம் என்ற பெருமை அஸ்ஸாமுக்கு கிடைத்துள்ளது.
3.தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் கூடுதல் பணி நேரம் ( Over time duty ) காலாண்டுக்கு 50 மணி நேரமாக இருந்ததை 100 மணி நேரமாக உயர்த்தும் மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.தொழிலாளர்களின் பணி நேரம், நாளொன்றுக்கு 10 மணி நேரத்தை தாண்டக் கூடாது என்றும், வாரத்துக்கு கூடுதல் பணி நேரம் உள்பட தொழிலாளரின் பணி நேரம் 60 மணி நேரத்தை தாண்டக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

உலகம்

1.இன்று சர்வதேச இடது கைப்பழக்கம் உடையோர் தினம்(International Left Hander’s Day).உலகின் மொத்த மக்கள்தொகையில் 10 சதவீதம் பேர் இடது கைப்பழக்கம் உடையோர்களாக இருக்கின்றனர். இடது கைப்பழக்கம் என்பது இயற்கையிலே ஒருவரின் மூளை வளர்ச்சியைப் பொறுத்து அமைகிறது. இவர்களின் சாதனைகளைப் பாராட்டும் விதத்திலும், சமூகத்தில் சிறுபான்மையாக உள்ள இவர்களுக்கு தகுந்த பொருட்களை தயாரிக்க வலியுறுத்தியும் இத்தினம் 1992ஆம் ஆண்டிலிருந்து கொண்டாடப்படுகிறது.
2.பாகிஸ்தான் தனது தேசிய கீதத்தை முதன் முறையாக வானொலியில் ஒலிபரப்பிய நாள் 13 ஆகஸ்டு 1954.