current3

தமிழகம்

1.முதல்வரின் இலாகாக்கள் நிதியமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் கவனித்துக் கொள்வார் என்று ஆளுநர் மாளிகையில் இருந்து வெளியான அறிக்கை தெரிவித்துள்ளது.மேலும் அமைச்சரவை கூட்டத்துக்கும் அவர் தலைமை வகிப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா

1.இந்தியா உலக அளவிலான அறிவியல் ஆராய்ச்சிகளில் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.’நேச்சர் இன்டெக்ஸ்’ நிறுவனம் சார்பில் கடந்த 2015-ஆம் ஆண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.இந்த பட்டியலில் சீனா முதலிடத்தைப் பிடித்துள்ளது.
2.நாட்டின் 29 வது மாநிலமாக உருவாக்கப்பட்ட தெலங்கானாவில் புதியதாக 21 மாவட்டங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.இதனால் அம்மாநிலத்தில் உள்ள மொத்த மாவட்டங்களின் எண்ணிக்கை 31ஆக உயர்ந்துள்ளது.

உலகம்

1.மனித உரிமைகளுக்கான சர்வதேச “மார்ட்டின் என்னல்ஸ்’ விருது சீனச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள உய்கர் இன முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த பேராசிரியர் இல்ஹாம் தோதிக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2.2024-ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை நடத்துவதற்கான ஏலத்தில் இருந்து இத்தாலி விலகியுள்ளது.
3.இன்று உலகக் கண்பார்வை தினம் (World Sight Day).
உலகளவில் சுமார் 37 மில்லியன் மக்கள் கண்பார்வையின்றி வாழ்கின்றனர். மேலும் சுமார் 124 மில்லியன் மக்கள் குறைந்த பார்வையுடனே வாழ்கின்றனர். குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ பற்றாக்குறையினால் பார்வைக் கோளாறு ஏற்படுகிறது. குறிப்பாக 75 சதவீதமான பார்வைக்குறைபாடுகளை சரிசெய்து விட முடியும். கண் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்தவே இத்தினம் கொண்டாடப்படுகிறது.ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் இரண்டாவது ஆவது வியாழக்கிழமை  இத்தினம் கொண்டாடப்படுகிறது.

விளையாட்டு

1.ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக அந்த அணியின் முன்னாள் கேப்டன் ஹீத் ஸ்ட்ரீக் நியமிக்கப்பட்டுள்ளார்.
2.சமீபத்தில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய பந்து வீச்சாளர் அஸ்வின் மொத்தம் 27 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.அவர் இதுவரை 39 டெஸ்ட் போட்டிகளில் 220 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.அஸ்வின் டெஸ்ட் தரவரிசையில் 900 புள்ளிகளுடன் முதல் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

தினம் ஒரு மாவட்டம் சிறப்பு செய்திகள்

18.இன்று திருவண்ணாமலை மாவட்டம்.

1989 ஆண்டு வட ஆற்காடு மாவட்டம் திருவண்ணாமலை சம்புவராயர் மாவட்டம் மற்றும் வடஆற்காடு அம்பேத்கர் மாவட்டங்களாகப் பிரிக்கப் பெற்றன. பின்னர் 1996 ஆம் ஆண்டின் மாவட்டப் பெயர் மாற்றங்களுக்கு பின் திருவண்ணாமலை மாவட்டமானது.புனித நகரமாக கருதப்படும் இந்நகரில் அண்ணாமலையார் திருக்கோயில் உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் கிழக்கே காஞ்சிபுரம் மாவட்டத்தினாலும், வடக்கே வேலூர் மாவட்டத்தினாலும், தெற்கே விழுப்புரம் மாவட்டத்தினாலும் மற்றும் மேற்கே தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களாலும் உள்ளன.
திருவண்ணாமலை மலை ஒரு இறந்த எரிமலையாகும். பல நூற்றாண்டுக்கு முன் இது வெடித்து இதன் தீ குழம்பு நீரில் தோய்ந்து உருவானதுதான் தக்காணம் என்றும் சிலர் கூறுவார்.
கார்த்திகை தீப திருநாளன்றும், முழுநிலவு நாட்களிலும் சிவ பக்தர்கள் அண்ணாமலையை வலம் வருகிறார்கள். இதனை மலைவலம் என்று அழைக்கின்றனர். பக்தர்கள் வலம் வருகின்ற கிரிவலப் பாதை இரண்டு உள்ளது.
திருவண்ணாமலையில் மலைவலம் வருகின்ற பாதையில் எண்ணற்ற சித்தர்களின் ஜீவசமாதிகள் அமைந்துள்ளன. இரமண மகரிஷி ஆசிரமம், சேஷாத்திரி சுவாமிகள் ஆசிரமம், விசிறி சாமியார் ஆசிரமம் போன்றவை உள்ளன.