இந்தியா

1.இந்தியா மற்றும் இந்தோனேசியா இணைந்து மேற்கொள்ளும் 29வது CORPAT பயிற்சி மே 09 முதல் மே 12 வரை அந்தமான் & நிக்கோபார் கடற்பரப்பிலும், மே 22 முதல் மே 25 இந்தோனேசியாவின் Belawan கடற்பரப்பிலும் நடைபெற உள்ளது.
2.நெதர்லாந்து நாடு துணையுடன் டெல்லியில் உள்ள பாரமுல்லா கால்வாயை (Barapullah Drain) சுத்தம் செய்யும் பணி (தூர்வாரும் பணி), தொடங்கப்பட்டுள்ளது.இந்த திட்டத்திற்கு Local Treatment of Urban Sewage Streams for Healthy Reuse என பெயரிடப்பட்டுள்ளது.
3.ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் அருகே நந்தன் கண்ணன் வனவிலங்கு பூங்கா உள்ளது. இங்குள்ள மேகா, விஜயா, சினேகா ஆகிய புலிகள் சமீபத்தில் ஏழு குட்டிகளை ஈன்றெடுத்தன.பார்வையாளர்களின் விருப்பப்படி ஒரு புலிக்குட்டிக்கு பாகுபலி என பெயர்சூட்டி உள்ளனர்.மற்ற புலிக்குட்டிகளுக்கு குந்தன், அடியஷா, சாஹில், விக்கி, சினு, மவுசுமி ஆகிய பெயர்கள் சூட்டப்பட்டன.


உலகம்

1.க்ரோனிக் வேஸ்டிங் டிஸீஸ் (Chronic-wasting disease – CWD) எனப்படும் நோய் நார்வேயில் உள்ள காட்டு கலைமான்களிடத்திலும் பரவ ஆரம்பித்துள்ளது. இதனால் போர்க்கால நடவடிக்கையாக, நார்வேயின் நோர்ஜெல்லா மலைப்பகுதியில் இருக்கும் 2,200 கலைமான்களைக் கொல்வதற்கு அந்த நாட்டு அரசு முடிவெடுத்துள்ளது.2,200 என்பது நார்வேயின் காட்டுக் கலைமான்களின் எண்ணிக்கையில் 10 சதவீதம் ஆகும்.
2.டைனோசர் காலத்தில் வாழ்ந்த ராட்சத பறவையின் புதைப்படிவம் ஒன்று தற்போது சீனாவில் கனான் என்ற இடத்தில் கிடைத்துள்ளது.இந்த பறவைக்கு பெய்பிலாங் என்று பெயரிட்டுள்ளனர்.
3.அமெரிக்காவின் எரிசக்தி துறையில் முக்கிய அமைப்பாக திகழ்கிற மத்திய எரிசக்தி ஒழுங்குமுறை ஆணையத்தின் உறுப்பினராக இந்திய வம்சாவளியை சேர்ந்த நீல் சாட்டர்ஜியை ஜனாதிபதி டிரம்ப் நியமித்துள்ளார்.


விளையாட்டு

1.டெல்லியில் நடைபெற்று வரும் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில்,கிரேக்கோ ரோமன் பிரிவு, 80 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் ஹர்பிரீத் சிங் வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினார்.ஆண்களுக்கான ‘கிரிகோ-ரோமன்’ 85 கி.கி, எடைப்பிரிவில் அனில் குமார் வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினார்.பெண்களுக்கான 75 கி.கி, எடைப்பிரிவில் இந்தியாவின் ஜோதி வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினார்.


இன்றைய தினம்

1.இன்று சர்வதேச செவிலியர் தினம் (International Nurses Day).
பிளாரன்ஸ் நைட்டிங்கேல் (Florence Nightingale) என்பவர் 1820ஆம் ஆண்டு மே 12 இல் பிறந்தார். இவர் மக்களுக்கும், போரின்போது பாதிக்கப்பட்ட ராணுவ வீரர்களுக்கும் சிறந்த மருத்துவ சேவை புரிந்தார். இவரின் மருத்துவ சேவையை கௌரவிக்கும் வகையில் இவர் பிறந்த தினமான மே 12 ஐ சர்வதேச செவிலியர் தினமாக 1965ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்படுகிறது.
2.20 டன் விண்கல் வேர்ஜீனியாவில் வீழ்ந்த நாள் 12 மே 1922.
3.காஜ் சிங்க் ஜோத்பூரின் மன்னனாக முடி சூடிய நாள் 12 மே 1952.

 

– தென்னகம்.காம் செய்தி குழு