நடப்பு நிகழ்வுகள் – 12 மார்ச் 2017
இந்தியா
1.இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம் விரைவில் கியாஸ் இருப்பு எவ்வளவு, என்பதை காட்டும் நவீன சிலிண்டர்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது.
2.அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களுக்கான பிரசவ கால விடுமுறை 26 வாரமாக அதிகரிக்க வகைசெய்யும் திருத்த மசோதா மக்களவையில் கடந்த மார்ச் 10-ஆம் தேதி நிறைவேற்றப்பட்டுள்ளது.
3.விவசாயிகளுக்கான பயிர்க் காப்பீட்டுத் திட்டங்களுக்கு மத்திய அரசு ஆதார் எண்ணை கட்டாயமாக்கியுள்ளது.வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் தொடங்கவுள்ள காரீஃப் பருவம் முதல் இந்தப் புதிய விதிமுறை அமலாகிறது.
4.கணவனை இழந்த பெண்கள் “விதவைகள்” என அழைக்கப்படமாட்டார்கள் அவர்கள் “கல்யாணி” என்றே அழைக்கப்படுவார்கள் என மத்திய பிரதேச முதல்வர் தெரிவித்துள்ளார்.
5.2016ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் தேர்வு குழுவின் தலைவராக மலையாள சினிமா இயக்குனர் பிரியதர்ஷன் நியமிக்கப்பட்டுள்ளார்.
6.பிரதமர் மோடியின் புகைப்படத்தை தங்களது விளம்பரங்களில் பயன்படுத்தியதற்கு பேடிஎம், ஜியோ நிறுவனங்கள் மன்னிப்பு கேட்டுள்ளன.
வர்த்தகம்
1.டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வாகன தயாரிப்புக்காக வோக்ஸ்வேகன் மற்றும் ஸ்கோடா நிறுனங்களுடன் நீண்ட கால அடிப்படையிலான ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் டாடா மோட்டார்ஸ் நிர்வாக இயக்குநர் குன்ட்டர் பட்செக், வோக்ஸ்வேகன் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மாத்யூஸ் முல்லர், ஸ்கோடா ஆட்டோவின் தலைமைச் செயல் அதிகாரி பெர்னார்டு மேயர் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.
உலகம்
1.சர்வதேச தடைகளை மீறி கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து சென்று தாக்கும் “ஹோமுஸ் 2” என்ற சக்தி வாய்ந்த ஏவுகணையை ஈரான் வெற்றிகரமாக கடந்த வாரம் பரிசோதித்துள்ளது.
2.படிப்பை பாதியில் நிறுத்திய “பேஸ்-புக்” அதிபரின் (ஷூக்கர் பெர்க்) தொழில் சாதனைக்காக ஹார்வர்டு பல்கலைக்கழகம் அவருக்கு டாக்டர் பட்டம் வழங்க முடிவு செய்துள்ளது.இவர் அமெரிக்காவில் உள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் படித்தது குறிப்பிடத்தக்கது.
சிறப்பு செய்திகள்
பிசிசிஐ விருதுகள் – 2017
1.சர்வதேச கிரிக்கெட் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் இந்தியருக்கு வழங்கப்படும் “பாலி உம்ரிகர்” விருதை மூன்றாவது முறையாக விராட் கோலி பெற்றுள்ளார்.இதற்கு முன்னர் 2011-12, 2014-15 ஆகிய ஆண்டுகளில் மேற்கண்ட விருதை இவர் பெற்றுள்ளார்.
2.இந்தியா-மேற்கிந்தியத் தீவுகள் இடையிலான டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடும் வீரருக்கு வழங்கப்படும் திலீப் சர்தேசாய் விருதை 2-ஆவது முறையாக அஸ்வின் பெற்றுள்ளார்.இதற்கு முன்னர் 2011-இல் மேற்கண்ட விருதைப் பெற்றுள்ளார்.
3.ரஞ்சி போட்டியில் சிறப்பாக செயல்பட்ட முன்னாள் வீரர்கள் ரஜீந்தர் கோயல், பத்மாகர் ஷிவால்கர் ஆகியோர் சி.கே.நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருதும்,மகளிர் அணி முன்னாள் கேப்டன் சாந்தா ரங்கசாமி பிசிசிஐ வாழ்நாள் சாதனையாளர் விருதும் பெற்றனர்.
இன்றைய தினம்
1.முதற் தடவையாக கொக்கா-கோலா மென்பானம் கண்ணாடிப் புட்டியில் அடைத்து விற்கப்பட்ட நாள் 12 மார்ச் 1894.
2.சாகித்ய அகாதெமி இந்திய அரசினால் தொடங்கப்பட்ட நாள் 12 மார்ச் 1954.
ஐந்து மாநில தேர்தல் முடிவுகள்
உத்தர பிரதேசம்(403)
பாரதிய ஜனதா | 325 |
சமாஜ்வாடி, காங்., | 54 |
பகுஜன் சமாஜ் | 19 |
மற்றவர்கள் | 05 |
உத்தரகண்ட்(70)
பாரதிய ஜனதா | 57 |
காங்கிரஸ் | 11 |
மற்றவர்கள் | 02 |
பஞ்சாப்(117)
காங்கிரஸ் | 77 |
அகாலி – பா.ஜ. | 18 |
ஆம் ஆத்மி | 20 |
மற்றவர்கள் | 02 |
மணிப்பூர்(60)
காங்கிரஸ் | 28 |
பா.ஜ., | 21 |
மற்றவை | 11 |
கோவா(40)
காங்கிரஸ் | 17 |
பா.ஜ., | 13 |
மற்றவை | 10 |
– தென்னகம்.காம் செய்தி குழு