இந்தியா

1.ஒடிசா கடற்கரையில் உள்ள அப்துல்கலாம் தீவிலிருந்து (வீலர் தீவு) நேற்று காலை 7.45 மணியளவில் எதிரிநாட்டு ஏவுகணைகளை இடைமறித்து தாக்கி அழிக்கும் வல்லமை கொண்ட ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக சோதனை செய்தது.இந்த தகவலை பாதுகாப்பு மேம்பாட்டு ஆராய்ச்சி அமைப்பு வெளியிட்டுள்ளது.
2.கர்நாடக மாநிலத்தில் கம்பளா போட்டி நடத்துவதற்காக புதிய சட்ட மசோதா கர்நாடக சட்டப்பேரவையில் கடந்த பிப்ரவரி 10-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது.
3.உத்தரப்பிரதேச சட்டசபைக்கான நேற்று நடந்த முதல் கட்ட தேர்தலில் 63 % வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.


உலகம்

1.இந்தியா, சீனா இடையே 1962-ல் நடந்த போரின்போது வழி தவறி இந்திய எல்லைக்குள் நுழைந்து கடந்த 50 ஆண்டுகளாக சொந்த நாட்டுக்கு திரும்ப முடியாமல் தவித்த சீன ராணுவ வீரர் வாங்கி (77) மீண்டும் அவரது குடும்பத்தினருடன் சேர்த்து வைக்கப்பட்டார். இவர் சீனாவின் சாங்ஸி மாகாணத்தில் உள்ள யூனாய் நன்கன் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ஆவார்.
2.தடையை மீறி மீண்டும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வடகொரியா சோதனை செய்துள்ளது.அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்ற பிறகு வடகொரியா சோதனை செய்யும் முதல்  ஏவுகணை இதுவாகும்.வடக்கு பியோங்கன் பிராந்தியத்தில் பங்க்யான் ஏவுதளத்தில் இருந்து இந்த ஏவுகணை சோதனை செய்யப்பட்டது.
3.உலகிலேயே அதிக எடை கொண்ட எகிப்து தலைநகர் கெய்ரோவை சேர்ந்த பெண் எமான் அகமது (வயது 36),எடை குறைப்பு சிகிச்சைக்காக மும்பை கொண்டுவரப்பட்டார். கிரேன் உதவியுடன் அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.தற்போது இவர் 500 கிலோ எடையுடன் உள்ளார்.


இன்றைய தினம்

1.இன்று சார்லஸ் டார்வின் பிறந்த தினம் (Charles Darwin Birth Anniversary Day).
பரிணாமத்தின் தந்தை எனப் போற்றப்படுவர் சார்லஸ் டார்வின் ஆவார். உயிர்கள் எப்படித் தோன்றின என்பதில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியவர். விலங்குகள் மற்றும் உயிரினங்களின் பரிணாமம் என்பது இயற்கைத் தேர்வு என்னும் கோட்பாட்டின் அடிப்படையில் அமைந்தன என்பதைக் கண்டறிந்தவர். இயற்கை விஞ்ஞானியான இவர் 1809ஆம் ஆண்டு, பிப்ரவரி 12 இல் பிறந்தார்.
2.இன்று ஆப்ரகாம் லிங்கன் பிறந்த தினம் (AbrahamLinco In Birth Day).
ஆப்ரகாம் லிங்கன் 1809ஆம் ஆண்டு பிப்ரவரி 12 இல் பிறந்தார். இவர் அமெரிக்காவின் 16ஆவது குடியரசுத் தலைவராகப் பதவி வகித்தார். ஐக்கிய அமெரிக்காவைப் பிளவுபடாமல் காக்க உள்நாட்டுப் போர் நடத்தி வெற்றி பெற்றவர். அடிமை முறையை எதிர்த்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி, 1865இல் அரசியல் சட்டத்திருத்தத்தின் வழி அடிமை முறையை ஒழித்தார்.
3.இந்தியாவுக்கான தனது இரண்டாவது கடற்பயணத்தை வாஸ்கோடகாமா லிஸ்பனில் இருந்து ஆரம்பித்த நாள் 12 பிப்ரவரி 1502.
4.கலாபகசுத் தீவுகளை எக்குவாடோர் இணைத்துக் கொண்ட நாள் 12 பிப்ரவரி 1832.
5.சீனக் குடியரசில் கிரெகோரியன் நாட்காட்டி அமுலுக்கு வந்த நாள் 12 பிப்ரவரி 1912.

 

– தென்னகம்.காம் செய்தி குழு