current-affairs

இந்தியா

1.மூன்று நாள் அரசு முறைப் பயணமாக ஜப்பான் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி,ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபே முன்னிலையில் இரு நாடுகளுக்கு இடையேயான வரலாற்றுச் சிறப்புமிக்க சிவில் அணுசக்தி ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது.
2.சென்னையைச் சேர்ந்த கே-லைட் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனர் திலிப் கும்பட் டெல்லியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்தியன் சொசைட்டி ஆப் லைட்டிங் இன்ஜினியர்ஸ் (ஐஎஸ்எல்இ) அமைப்பின் தேசிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
3.நகைக்கடைகளில் நகை வாங்கும் அனைவரும் தங்களது பான் கார்டு விவரத்தை கட்டாயம் கொடுக்க வேண்டும் என மத்திய வருவாய்த்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
4.பழைய ரூபாய் நோட்டுகளையே எரிபொருள், சமையல் எரிவாயு, மின் கட்டணம் உள்ளிட்ட தேவைகளுக்கு வரும் 14-ஆம் தேதி வரை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
5.மத்திய மின்னணு, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் வெளியிட்டுள்ள அறிவிப்பில் இந்தியாவில் உள்ள அனைத்து தனியார் தகவல் தொழில்நுட்ப (ஐ.டி.) அலுவலகங்களிலும் “சைபர்’ பாதுகாப்பு அதிகாரி நியமிக்கப்படுவது கட்டாயமாக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

உலகம்

1.உலகின் மிகப் பிரபலமான பழம்பெரும் கனடா பாடகர் மற்றும் கவிஞர், பாடலாசிரியர், ஓவியர் என அனைத்து துறைகளிலும் திறமை வாய்ந்த லியோனார்ட் கோயன் (82), கடந்த நவம்பர் 10ம் தேதி இரவு காலமானார்.இவருடைய 14வது ஸ்டுடியோ ஆல்பமான இறுதி ஆல்பம் ‘You want it darker’ கடந்த அக்டோபர் 21-ஆம் தேதி தான் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.
2.மூன்று நாள் அரசு முறைப் பயணமாக ஜப்பான் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடியை,டோக்கியோவில் தற்போது உள்ள ஜப்பான் அரசர் அக்கிடோ சந்தித்து பேச்சவார்த்தை நடத்தினார்.
3.பாகிஸ்தானில் இருந்து 3 இந்திய தூதரக அதிகாரிகளை கடந்த நவம்பர் 10-ம் தேதி இந்தியா திரும்ப பெற்றது.
4.இன்று உலக நுரையீரல் அழற்சி தினம் (World Pneumonia Day).
நிமோனியா என்பது நுரையீரல் இழையங்களின் அழற்சியாகும். இது கிருமித்தொற்றினால் ஏற்படுகிறது. இதனால் இருமல், காய்ச்சல், அதிக வியர்வை, பசியின்மை அதிகளவு சளி மற்றும் அசௌகரிய நிலை என்பன காணப்படும். சிகிச்சை அளித்தால் பூரண குணமடையலாம். இந்த நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த 2009ஆம் ஆண்டில் இத்தினத்தை உலக சுகாதார அமைப்பு அறிவித்தது.

விளையாட்டு

1.தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் 32-ஆவது தேசிய ஜூனியர் தடகளப் போட்டி கோவை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது.இதில் 18 வயதுக்கு உள்பட்டோருக்கான உயரம் தாண்டும் போட்டியில் தில்லியைச் சேர்ந்த தமிழ் மாணவர் தேஜஸ்வின் சங்கர் 2.26 மீ. உயரம் தாண்டி தேசிய சாதனை படைத்துள்ளார்.இதற்கு முன்பு 2011-இல் கர்நாடகத்தைச் சேர்ந்த சசிதர் ஹர்சித் 2.17 மீ. தாண்டியதே சாதனையாக இருந்தது.