தமிழ்நாடு

சென்னையை வர்தா புயல் தலைகீழாக புரட்டிப்போட்டது. மணிக்கு 100 கி.மீ வேகத்தில் வீசத்துவங்கிய காற்று ஒரு கட்டத்தில் உச்ச அளவாக மணிக்கு 192 கி.மீ  வேகத்தில் வீசியது.பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்து சென்னையில் விமான மற்றும் புறநகர் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன.

 

இந்தியா

1.ரொக்க பரிவர்த்தனைகளை தவிர்த்து மின்னணு பண பரிமாற்ற முறைகளை ஊக்குவிக்க , மக்களுக்கு அது பற்றிய வழிமுறைகளை எடுத்துரைப்பதற்கு Digi shala என்னும் தொலைக்காட்சி சேனலை மத்திய அரசு தொடங்கியுள்ளது.முன்னதாக மின்னணு பரிமாற்றம் பற்றி எடுத்துரைக்க Digi Dhan Abhiyan என்ற பிரச்சார இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.
2.கொல்கத்தாவில் டிசம்பர் 01 முதல் 04 வரை 7வது உலக ஆயுர்வேத மாநாடு மற்றும் கண்காட்சி நடைபெற்றது.
3.இந்தியா மற்றும் பிரிட்டன் கடற்படைகள் இணைந்து மேற்கொள்ளும் வருடந்திர பயிற்சிகள் டிசம்பர் 05 முதல் 09 வரை மும்பையில் KONKAN 16 என்ற பெயரில் நடைபெற்றது.டிசம்பர் 12 முதல் 16 வரை கோவாவில் LIVE EXERCISE (LIVEX) என்ற பெயரில் நடைபெறுகிறது.
4.ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் இடது முற்போக்கு முன்னணி என்னும் மாணவர் பிரிவை ஏற்படுத்தி பெரும் கவன ஈர்ப்பை ஏற்படுத்திய கன்ஹையா குமார் , எழுதிய சுயசரிதை நூலான பிஹார் முதல் திஹார் வரை ( From Bihar To Tihar )  என்ற நூலை வந்தனா சிங் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்.
5.நாடாளுமன்ற உறுப்பினர்கள் அலுவல்பூர்வமாக வெளிநாட்டுப் பயணங்கள் முடித்து நாடு திரும்பியதும் தங்களின் பயணம் தொடர்பான தகவல்கள் அடங்கிய அறிக்கையை அளிக்க வேண்டும் என்று மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் உத்தரவிட்டுள்ளார்.
6.காஷ்மீர் முதல்வர் மெகபூபா முப்தி சையீத் ” பள்ளத்தாக்கு சுற்றுலா ” என்ற பொருள்படும்படியான Vaadi ki Sair ( Tour of the Valley ) குழந்தைகள் சுற்றுலா ரயிலை  துவக்கி வைத்துள்ளார்.இந்த ரயில் இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை பனிஹல் ( Banihal ) முதல் பாரமுல்லா வரை இயக்கப்படுகிறது.


உலகம்

1.யூனிசெப் அமைப்பின் நல்லெண்ண தூதராக சிறப்பான முறையில் செயல்பட்டதற்காக ஆட்ரே ஹெபர்ன் மனிதாபிமான விருது ( Audrey Hepburn Humanitarian Award ) பிரபல பாடகி Katy Perry க்கு வழங்கப்பட்டது.


முக்கிய தினங்கள்/வாரங்கள்

1.இன்று சர்வதேச கன உலோக தினம் (International Day of Heavy Metal).
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 12 ஆம் நாள் உலகளவில் உள்ள கன உலோக ரசிகர்கள் மற்றும் ஊழியர்கள் இத்தினத்தைக் கொண்டாடுகின்றனர். இத்தினத்தில் விளையாடி ஆல்பங்களை வெளியிடுகின்றனர். வீடுகள், வேலை செய்யும் இடம், கார் ஆகியவற்றிலும் சிறந்த இசையைப் பயன்படுத்த வலியுறுத்துகின்றனர். இத்தினம் ஐயர்ன் மேத்யூ என்பவரால் தோற்றுவிக்கப்பட்டது.