இந்தியா

1.நைலான் உள்ளிட்ட பொருட்களால் தயாரிக்கப்படும் மாஞ்சா நூலுக்கு நாடு முழுவதும் தடை விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
2.ஆந்திர மாநிலம் குண்டூரில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தில் கட்சியின் தலைவராக ஜெகன்மோகன் ரெட்டி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


உலகம்

1.International Centre for Climate Governance (ICCG) அமைப்பு வெளியிட்ட பட்டியலில் , உலக பருவநிலை சார்ந்த அறிவு சார் அமைப்புகளில் ( 2016 Top Climate Think Tanks in the Rest of the World – Absolute Global Rankings ) இந்தியாவின் TERI ( The Energy Resources Institute – New Delhi ) இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.
2.”உண்மையே கடவுள்” என்ற மகாத்மா காந்தியின் கையொப்பத்துடன் கூடிய பென்சில் ஓவியம் 32,500 பவுண்டுகளுக்கு ஏலம் போனது.லண்டன் நகரில் உள்ள பிரபல ’சோத்பைஸ்’ ஏல நிறுவனம் இதை ஏலத்தில் விடும் உரிமையை பெற்றது குற்பிப்பிடத்தக்கது.


விளையாட்டு

1.தெற்கு ஆஸ்திரேலியா ஓபன் ஸ்குவாஷ் போட்டியில், இந்தியாவின் ஹரிந்தர் பால் சந்தர் ஆஸ்திரேலியாவின் ரைஸ் டவுலிங்கை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
2.கவுதமாலாவில் நடைபெற்ற சர்வதேச பியூச்சர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டியில் கவுதமாலா வீரர் ஹாம்பிளர்ஸ் ஹேமண்டை வீழ்த்தி இந்தியாவின் கரண்ராஜன் (தமிழக வீரர்) சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.இதன் மூலம் இவர் சர்வதேச ஒற்றையர் பட்டத்தை வென்ற முதல் தமிழக வீரர் வென்ற பெருமையை பெற்றுள்ளார்.


இன்றைய தினம்

1.1898 – செனான் தனிமம் கண்டுபிடிக்கப்பட்டது.

 

– தென்னகம்.காம் செய்தி குழு