தமிழகம்

1.தமிழ் நாட்டில் நிலங்களுக்கான வழிகாட்டி மதிப்பு 33 %  குறைக்கப்பட்டுள்ளது.பதிவுக்கட்டணம் 1% லிருந்து 4% மாக உயர்த்தப்பட்டுள்ளது.முத்திரை கட்டணம் 7 % என்பதில் மாற்றம் செய்யப்படவில்லை.


இந்தியா

1.பாலின இடைவெளியை குறைக்கவும், பெண் குழந்தைகளுக்கு உரிய பங்களிப்பை வழங்குவதை உறுதிப்படுத்த Selfie with daughter என்ற செயலியை ஜனாதிபதி அறிமுகம் செய்துள்ளார்.
2.நாடு முழுவதும் இறைச்சிக்காக மாடு, ஒட்டகம் போன்ற கால்நடைகளை விற்க தடை விதித்து மத்திய அரசு பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக கேரள சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.


உலகம்

1.ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் (Shanghai Cooperation Organization – SCO) , இந்தியா மற்றும் பாகிஸ்தான் உறுப்பு நாடுகளாக இணைந்துள்ளன.1996ல் துவங்கப்பட்ட இந்த அமைப்பில் சீனா, ரஷ்யா, கஜகிஸ்தான், கிர்கிஷ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகியவை ஏற்கெனவே உறுப்பு நாடுகளாக உள்ளன.
2.வளைகுடா நாடான கத்தாருடன் சவூதி, பக்ரைன், எகிப்து, UAE, உள்ளிட்ட 4 நாடுகள் தூதரக உறவை முறித்துக்கொண்ட நிலையில், தற்போது இதில் ஏமன், லிபியா, மாலத்தீவுகளும் இணைந்துள்ளது.
3.மகாத்மா காந்தியின் பேத்தி எலா காந்திக்கு தென்னாப்பிரிக்க நாட்டின் வாழ்நாள் சாதனையாளர் என்னும் கவுரவ விருது வழங்கப்பட்டுள்ளது.


விளையாட்டு

1.கியூபாவில் நடைபெற்ற கபாபிளான்கா நினைவு செஸ் போட்டியில் , இந்திய வீரர் சசிகிரண் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
2.கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் , கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, கனடா வீராங்கனை கேப்ரியலா டாப்ரோவ்ஸ்கி கூட்டணி, ராபர்ட் பாரா (கொலம்பியா), அன்னலெனா குரோனிபெல்டு (ஜெர்மனி) இணையை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.போபண்ணா வென்ற முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம் இதுவாகும்.


இன்றைய தினம்

1.இன்று உலகக் குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு தினம் (World Day Against Child Labour).
உலகக் குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு தினம் 2002ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதும் குழந்தைத் தொழிலாளர்கள் இருந்துகொண்டுதான் இருக்கின்றனர். சட்டங்கள் இருந்தாலும் இதனை முற்றிலும் ஒழிக்க முடியவில்லை. உலகம் முழுவதும் மில்லியன் கணக்கான குழந்தைகள் மிகவும் ஆபத்தான வேலைகளை செய்து வருகின்றனர். குழந்தைத் தொழிலாளர்களை அதிகம் கொண்ட நாடாக இந்தியா உள்ளது.
2.பல்கேரியாவில் அரசியற் கட்சிகள் தடை செய்யப்பட்ட நாள் 12 ஜூன் 1934.

 

– தென்னகம்.காம் செய்தி குழு