current-affairs

தமிழகம்

1.தமிழர் விடுதலை இயக்கம் என்ற அமைப்புக்குத் தமிழக அரசு தடை விதித்த நாள் 12 ஜுன்  2003.

இந்தியா

1.குஜராத்தில் சிங்கங்களுடன் செல்பி எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.மீறினால் கடும் அபராதம் விதிக்கப்படும் என்று குஜராத் வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
2.இன்று குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம்.உலகம் முழுவதும் ஆண்டுதோறும் ஜுன் 12 ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகளின் ஓர் அங்கமான பன்னாட்டு தொழிலாளர் அமைப்பினால்  அங்கீகரிக்கப்பட்ட இந்த நாள் குழந்தைத் தொழிலாளர்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த 2002ம் ஆண்டு முதல் கடைபிடிக்கப்படுகிறது.ஐ.எல்.ஓ வின் 138 மற்றும் 182வது உடன்படிக்கைகளின் ஏற்பினால் தூண்டப்பட்டு இந்த நாள் உருவாக்கப்பட்டது.

உலகம்

1.நெல்சன் மண்டேலாவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நாள் 12 ஜுன் 1964.இவர் தென்னாப்பிரிக்காவின் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் குடியரசுத் தலைவர்.அதற்கு முன்னர் நிறவெறிக்கு எதிராகப் போராடிய முக்கிய தலைவர்களுள் ஒருவராக இருந்தார்.
2.கூகுள் எர்த், லினக்ஸ் பதிப்பு வெளியிடப்பட்ட நாள் 12 ஜுன்  2006.

விளையாட்டு

1.ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடந்த ஆஸ்திரேலிய ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் இறுதிப்போட்டியில் சீன வீராங்கனையை 11-21, 21-14, 21-19 என வீழ்த்தி சாய்னா சாம்பியன் பட்டம் வென்றார்.சாய்னா வெல்லும் 2வது ஆஸ்திரேலியன் ஓபன் பட்டம் இது.ஒட்டுமொத்தத்தில் சாய்னாவுக்கு இது 7வது சூப்பர் சீரிஸ் பட்டமாகும்.