தமிழகம்

1.தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.தமிழக அரசில் பணியாற்றும் ஏ  மற்றும் பி பிரிவு ஊழியர்களுக்கு ரூ.1000 சிறப்பு மிகை ஊதியமும்,சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு ரூ.3000 சிறப்பு மிகை ஊதியமும்,முன்னாள் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு ரூ.500 பொங்கல் பரிசாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
2.சென்னைத் துறைமுகத்தின் நிதி ஆலோசகர் மற்றும் தலைமை கணக்கு அலுவலராக சி.எஸ்.வேமன்னா (48), கடந்த 10-ம் தேதி பொறுப்பேற்றுக்கொண்டார்.


இந்தியா

1.முதலீட்டாளர்களை ஈர்க்கும் விதமாக , குஜராத் மாநில அரசின் “குஜராத் வைப்ரன்ட் – 2017” ( Gujarat Vibrant – 2017 ) மாநாடு , காந்தி நகரில் ஜனவரி 10 முதல் ஜனவரி 13 வரை நடைபெறுகிறது.இந்த மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார்.மேலும் உலகிலேயே உற்பத்தி துறையில் 6வது பெரிய நாடாக இந்தியா உள்ளதாக இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
2.கர்நாடகா வங்கி , Universal Sompo General Insurance நிறுவனத்துடன் இணைந்து, தங்கள் வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளவர்களுக்கு KBL Suraksha என்ற குழு விபத்து காப்பீட்டு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
3.ராஜிவ் குப்தா என்பவர் பிரதமர் மோடி வானொலியில் Maan Ki Baat என்ற தலைப்பில் ஆற்றிய உரைகளை தொகுத்து Pradhan Mantri Ke Mann Ki Baat என்ற பெயரில் புத்தகமாக வெளியிட்டுள்ளார்.
4.திகார் சிறையில் உள்ள ஆண் கைதிகளின் சிறை பாதுகாப்புக்கு முதல் முறையாக அஞ்சு மங்கலா என்ற பெண் கண்காணிப்பாளர் பணியமர்த்தப்பட்டுள்ளார்.
5.நேபாள நாட்டில் உள்ள லால்பகேயா, பாக்மதி, கமலா ஆகிய மூன்று நதிகளில் வெள்ளத் தடுப்பு கரைகள் அமைக்க இந்தியா 38.82 கோடி நிதியுதவி வழங்கியுள்ளது.


உலகம்

1.ஃபிஃபா என்றழைக்கப்படும் சர்வதேச கால்பந்து அமைப்பு உலக கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்கும் நாடுகளின் தற்போதைய எண்ணிக்கையான 32 என்பதனை 48-ஆக மாற்றும் திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.
2.மலேசியாவில் பாஸ்போர்ட்டைத் தொலைப்பவர்களுக்கு அபராதம் விதிக்க மலேசிய அரசு முடிவெடுத்துள்ளது.
3.மத்திய அமெரிக்க நாடான நிகராகுவாவின் அதிபராக டேனியல் ஓர்டேகன் (71), மூன்றாவது முறையாக பதவியேற்றுக் கொண்டுள்ளார்.மேலும் அவரது மனைவி ரோஸாரியோ முரில்லோ துணை அதிபராகப்  பதவியேற்றுக் கொண்டுள்ளார்.நிகராகுவாவின் வரலாற்றில் இரு பதவிகளை ஒரு தம்பதி வகிப்பது இதுவே முதல்முறையாகும்.


விளையாட்டு

1.இங்கிலாந்திற்கு எதிரான ஒரு நாள் போட்டி தொடர், சர்வதேச டி20 தொடர் மற்றும் பிப்ரவரியில் நடைபெறவுள்ள வங்காளதேசத்திற்கு எதிரான ஒரு டெஸ்ட் போட்டி ஆகியவற்றிற்கான இந்திய அணியின் உடற்கூறு மேம்படுத்துதல் திறன் பயிற்சியாளராக ஆனந்த் டேட் நியமிக்கப்படுகிறார் என பி.சி.சி.ஐ. தெரிவித்துள்ளது.


இன்றைய தினம்

1.இன்று தேசிய இளைஞர் தினம் (National Youth Day).
சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளான ஜனவரி 12 ம் தேதி தேசிய இளைஞர் நாள் (National Youth Day)  இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது.1984-ஆம் ஆண்டு இந்திய அரசாங்கம் இத்தினத்தை “தேசிய வாலிபர் தினமாக” அறிவித்தது, அதைத்தொடர்ந்து 1985-ல் ஜனவரி 12-ம் தேதி முதன்முதலாக கொண்டாடப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதும் இத்தினத்தை அனுசரிக்கப்படுகிறது.
2.இன்று சுவாமி விவேகானந்தர் பிறந்த தினம்.இவர் பிறந்த தேதி 12 ஜனவரி 1863.
3.முதற்தடவையாக தூர இடத்துக்கான வானொலி செய்தி ஈஃபெல் கோபுரத்தில் இருந்து அனுப்பப்பட்ட நாள் 12 ஜனவரி 1908.
4.நடிகர் எம். ஆர். ராதாவால் எம்.ஜி. ராமச்சந்திரன் துப்பாக்கியால் சுடப்பட்ட நாள் 12 ஜனவரி 1967.
5.உலகின் மிகப்பெரும் பயணிகள் கப்பலான ஆர்.எம்.எஸ். குயீன் மேரி 2 தனது பயணத்தை ஆரம்பித்த நாள் 12 ஜனவரி 2004.

 

– தென்னகம்.காம் செய்தி குழு