Current-Affairs-Updates

இந்தியா

1.பாகிஸ்தானில் கராச்சி வர்த்தக அமைப்பு நடத்திய நிகழ்வில் இந்தியத் தூதர் கௌதம் பம்பாவாலேவுக்கு உரையாற்றுவதற்கு அனுமதிக்கப்படாமல் அவமதிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இதனால் வெளியுறவுத்துறை அமைச்சகம்  டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதர் அப்துல் பாசித்துக்கு சம்மன் அனுப்பியுள்ளது.

உலகம்

1.இன்று தெற்கு ஒத்துழைப்பு ஐக்கிய நாடுகள் தினம் (United Nations Day for South – South Cooperation).

நிதி, உணவுப் பொருட்கள், வெப்பநிலை மாற்றம் ஆகியவற்றால் உலக அளவில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள், வளரும் நாடுகள் மத்தியில் அதிக ஒத்துழைப்பை ஏற்படுத்துகின்றன. தெற்கு – தெற்கு வியாபாரம், முதலீடு போன்றவை உயர்ந்துள்ளன. அதே சமயத்தில் வெப்ப நிலை மாற்றத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் முக்கிய பங்காற்ற வேண்டியுள்ளது. டிசம்பர் 19அன்று கொண்டாடப்பட்ட இத்தினம் ஐ.நா. வால் செப்டம்பர் 12ஆம் தேதிக்கு 2012 இல் மாற்றப்பட்டது.
2.சீனா உலகிலேயே மிக நீளமான அதிவேக புல்லட் ரயில் பாதைகளைக் கொண்ட நாடாக உருவெடுத்துள்ளது.தற்போது அந்த நாட்டில் புல்லட் ரயில் பாதையின் நீளம் 20 ஆயிரம் கிலோ மீட்டரைத் தாண்டியுள்ளது.

விளையாட்டு

1.பிரேசில் நாட்டின் ரியோ நகரில்  நடைபெற்று வரும் மாற்றுத் திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டியில் 5 தங்கப் பதக்கங்களை(50 மீட்டர் ப்ரீ ஸ்டைல், 100 மீட்டர் பேக் ஸ்ட்ரோக், ப்ரீ ஸ்டைல், 400 மீட்டர் ப்ரீ ஸ்டைல், தனிநபர் 200 மீட்டர்) வென்று ரஷ்ய வீராங்கனை ஆக்சானா சாவ்சென்கோ இன்கிரிடிடுலஸ் சாதனை படைத்துள்ளார்.இதன் மூலம் ஒரே பாரா ஒலிம்பிக் போட்டியில் 5 தங்கம் வென்ற சாதனைப் பெண் என்ற பெருமையை ஆக்சானா சாவ்சென்கோ இன்கிரிடிடுலஸ் தன் வசப்படுத்தியுள்ளார்.
2.நியூயார்க்கில் நடைபெற்ற அமெரிக்க ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் சுவிட்சர்லாந்து வீரர் வாவ்ரிங்கா சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.இவர் தன்னை எதிர்த்து விளையாடிய செர்பியாவின் ஜோகோவிச்சை  6-7 (1), 6-4, 7-5, 6-3 என்ற செட் கணக்கில் தோற்கடித்து சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.இது இவர் வெல்லும் முதல் அமெரிக்க ஓபன் கிராண்ட்ஸ்லாம் பட்டமாகும்.