இந்தியா

1.India On Track ( IOT ) என்ற திட்டத்தின்படி அமெரிக்காவின் தேசிய கூடைப்பந்து கூட்டமைப்பின் ( National Baseket Ball Association of USA – NBA ) சார்பில் , கூடைப்பந்து பள்ளி மும்பையில் தொடங்கப்பட்டுள்ளது.
2.இந்தியா மற்றும் மங்கோலியா ராணுவங்கள் இணைந்து மேற்கொள்ளும் 12வது ராணுவ பயிற்சி Nomadic Elephant 2017, மிசோரமில் ஏப்ரல் 05 முதல் ஏப்ரல் 18 வரை நடைபெறுகிறது.
3.சத்தியாகிரகம் துவங்கியதின் 100-ஆம் ஆண்டை முன்னிட்டு, புதுடெல்லியில் Swachhagraha – Bapu Ko Karyanjali – Ek Abhiyan, Ek Pradarshani என்ற கண்காட்சியை பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார்.
4.பெங்களூருவில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தொல்லைகளை தடுக்க “பிங்க் ஹொய்சாலா” ரோந்து வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.பெண்கள் தங்களது பிரச்சனைகளை தொலைபேசி மூலமாகவோ அல்லது சுரக்சா app மூலம் தெரிவித்தால் ரோந்து வாகனத்தில் உள்ள பெண் காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து செல்வார்கள்.
5.எச்.ஐ.வி. மற்றும் எய்ட்ஸ் நோயாளிகளின் உரிமைகளை பாதுகாக்கும் விதமாக மத்திய அரசு தயாரித்த ‘எச்.ஐ.வி. (தடுப்பு, கட்டுப்பாடு) மசோதா-2017’ என்ற மசோதா பாராளுமன்றத்தில் நேற்று நிறைவேற்றப்பட்டது.இந்த மசோதாவின் மூலம் எச்.ஐ.வி., மற்றும் எய்ட்ஸ் நோயாளிகளிடம், யாரேனும் பாரபட்சமாக நடந்து கொண்டால் அவர்களுக்கு 3 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்க முடியும்.


உலகம்

1.ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடுவிற்கு, அமெரிக்க இந்திய வர்த்தக கவுன்சில் ( US India Business Council ) Transformative Chief Minister என்ற விருதை வழங்குவதாக அறிவித்துள்ளது.
2.2017-ஆம் ஆண்டுக்கான யுனெஸ்கோ – கல்லெர்மோ கெனோ உலக பத்திரிக்கை சுதந்திர பரிசை, எரித்ரியா நாட்டை பூர்வீகமாக கொண்ட, தற்போது சுவீடனில் வசித்து வரும் டாவிட் இசாக் (Dawit Isaak ) பெறுகிறார்.


இன்றைய தினம்

1.இன்று மனித விண்வெளிப் பயணத்துக்கான சர்வதேச நாள் (International Day of Human Space Flight).
ரஷ்யாவைச் சேர்ந்த யூரி ககாரின் என்கிற விண்வெளி வீரர் விஸ்டாக் என்கிற விண்கலத்தின்மூலம் 1961ஆம் ஆண்டு ஏப்ரல் 12 அன்று விண்வெளிக் குச் சென்று வந்தார். இவர் பூமியை 1 மணி 48 நிமிடத்தில் சுற்றி வந்தார். யூரி ககாரின் முதன்முதலில் விண்வெளிக்குச் சென்று திரும்பி வந்த ஏப்ரல் 12ஐ விண்வெளி வீரர்கள் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
2.இன்று வீதியோரச் சிறுவர்களுக்கான சர்வதேச நாள் (International Day for Street Children).
உலகெங்கும் கோடிக்கணக்கில் வீதியோரங்களில் சிறுவர்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்களின் நல்வாழ்விற்காகவும், உரிமைகளுக்காகவும் குரல் கொடுக்கும் நோக்கில் இத்தினம் சர்வதேச அளவில் ஏப்ரல் 12ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. மொராக்கோ, உகாண்டா, எத்தியோப்பியா, குவார்த்தமாலா, இந்தியா உள்ளிட்ட பல உலக நாடுகளில் கொண்டாடப்படுகிறது.
3.ஜோனாஸ் சால்க் என்பவரினால் கண்டுபிடிக்கப்பட்ட போலியோ நோய்த் தடுப்பூசி பாதுகாப்பானதென அறிவிக்கப்பட்ட நாள் 12 ஏப்ரல் 1955.
4.முதலாவது மீள் விண்ணோடம் கொலம்பியா விண்ணோடம் விண்வெளியை நோக்கி ஏவப்பட்ட நாள் 12 ஏப்ரல் 1981.

 

– தென்னகம்.காம் செய்தி குழு