current-affairs

இந்தியா

1.மாநிலங்களவையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் கர்ப்பிணி பெண்கள் பேறுகால விடுமுறையாக இனி 26 வாரமாக விடுப்பு எடுக்கலாம் என்ற மசோதாவை நிறைவேற்றப்பட்டது.
2.குஜராத் மாநில பாஜக தலைவராக ஜிட்டு வகானி நியமிக்கப்பட்டுள்ளார்.

உலகம்

1.இன்று உலக யானைகள் தினம்(World Elephant Day).ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு 12 ல் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் கொண்டாடப்படுவதன் நோக்கம் யானைகளை பாதுகாப்பதே ஆகும். இன்றைக்கு உலகத்தில் உள்ள 65 அமைப்புகள் மற்றும் யானைகளை கொண்ட நாடுகள் இந்த தினத்தை கொண்டாடி வருகின்றன. இந்த தினத்தில் தனியார் வளர்க்கும் யானைகளை பாதுகாப்பதும் ஒரு நோக்கமாகும்.முதன் முதலில் இந்த தினம் 2012 ஆக.,12ல் கொண்டாட ஆரம்பிக்கப்பட்டது. ‘வனத்திற்குள் திரும்பு’ என்ற ஆங்கிலப் படத்தை வில்லியம் சாட்னர் என்பவர் எடுத்தார். இந்த படத்தின் கதையே ஒரு தனியார் வளர்க்கும் யானையை, காட்டிற்குள் மீண்டும் விடுவது பற்றியது. இந்த படம் 2012 ஆக.,12ல் வெளியானது. அன்றைய தினம் முதல் ‘உலக யானைகள் தினம்’ கொண்டாடப்பட்டு வருகிறது.
2.இன்று சர்வதேச இளைஞர் தினம்(International Youth Day).இளைஞர்களுக்கு இருக்கும் பிரச்சினைகளைக் கண்டறிந்து அவற்றைக் களைவது, அவர்களை சக்தி படைத்தவர்களாக மாற்ற வேண்டும் என்கிற பார்வை 1995ஆம் ஆண்டில் ஐ.நா. சபையின் கவனத்திற்கு வந்தது. ஆகஸ்டு 12 ஐ சர்வதேச இளைஞர் தினமாக 1998ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது. இளைஞர்களின் பிரச்சினையைக் கண்டறிந்து, அதனை களைந்து அவர்களின் சக்தியை நாட்டு வளர்ச்சிக்குப் பயன்படுத்துவதே இத்தினத்தின் நோக்கமாகும்.

விளையாட்டு

1.ரியோ ஒலிம்பிக் போட்டியில் ஆடவர் 4X200 மீ., பிரிஸ்டைல் ரிலே பிரிவு நீச்சல் போட்டியில் அமெரிக்காவின் மைக்கேல் பெல்ப்ஸ் தங்கம் வென்றார்.இதன் மூலம் ஒலிம்பிக் அரங்கில் தனது 21-வது தங்கத்தை வென்று சாதனை படைத்துள்ளார்.