current2

தமிழகம்

1.தமிழகம் முழுவதும் ‘இ – சேவை’ மையங்களில் அரசின் சேவைகளை பெற மனு செய்வோருக்கு அலைபேசியில், எஸ்.எம்.எஸ்., தகவல் அனுப்பும் நடைமுறை வரும் அக்டோபர் 17-ம் முதல் செயல்பாட்டுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா

1.உத்தரப் பிரதேச அரசு இலவச ஸ்மார்ட் போன் திட்டத்தை நேற்று அறிமுகம் செய்துள்ளது.இலவச ஸ்மார்ட் போன் திட்டமான ”சமாஜ்வாதி ஸ்மார்போன் யோஜனா” என்ற திட்டத்தை அம்மாநில முதல்வர் நேற்று அறிமுகப்படுத்தியுள்ளார்.இந்த திட்டத்திற்கு பதினெட்டு வயது நிரம்பிய ,பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் இலவச ஸ்மார்ட் போனை பெற தகுதியுள்ளவர்களாவார்கள்.

உலகம்

1.அமெரிக்காவை சேர்ந்த ஆலிவர் ஹர்ட், பெங்க்ட் ஹால்ம்ஸ்ட்ரோம் ஆகிய இருவருக்கு 2016 ஆம் ஆண்டிற்கான பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.மக்கள், அரசாங்கங்கள் மற்றும் வாணிபம் ஆகியவற்றிற்கு இடையேயான ஒப்பந்தம் குறித்து இருவரும் ஆய்வுகளை மேற்கொண்டனர்.
2.இன்று சர்வதேச இயற்கைப் பேரழிவு குறைப்பு தினம் (International Day for Natural Disaster Reduction).
புயல், வெள்ளம், பூகம்பம், எரிமலை, சுனாமி, காட்டுத்தீ, கனமழை, சூறாவளி போன்றவையும் பேரழிவுகளை ஏற்படுத்துகின்றன. இயற்கைப் பேரழிவுகளைத் தடுத்தல், குறைத்தல் மற்றும் இவற்றிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளுதல் போன்றவற்றின்மீது கவனம் செலுத்தவே இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இத்தினம் ஐ.நா. சபையின் மூலம் 1989ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது.ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் இரண்டாவது ஆவது புதன் இத்தினம் கொண்டாடப்படுகிறது.
3.இன்று உலக ஆர்த்ரைடிஸ் தினம் (World ArthritisDay).
ஆர்த்ரைடிஸ் எனப்படுவது மூட்டு வலியாகும். இது ஆண், பெண், குழந்தைகள், சிறு வயதினர் என எல்லா தரப்பினரையும் தாக்கும் நோய். முன்னோர்களிடமிருந்து பரம்பரை நோயாகவும் பரவும். கீல்வாத நோயால் வரும் பெரும்பாலான ஆர்தரைடிஸ்கள் உடலின் பெரும்பாலான பகுதிகளைத் தாக்குகிறது. இந்த நோயைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

விளையாட்டு

1.இந்தூரில் நடைபெற்ற நியூஸிலாந்துக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 321 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி  பெற்றுள்ளது.இந்த வெற்றியின்  மூலம் தொடரை முழுமையாக கைப்பற்றி (3-0) சாதனை படைத்துள்ளது.ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகனாக அஸ்வின் அறிவிக்கப்பட்டார்.டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில்  115 புள்ளிகளுடன் இந்திய அணி முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது.

தினம் ஒரு மாவட்டம் சிறப்பு செய்திகள்

17.இன்று திருப்பூர் மாவட்டம்.

திருப்பூர் மாவட்டம்  அக்டோபர் 2008 இல் உருவாக்கப்பட்டது. தமிழகத்தில் கடைசியாக உருவாக்கப்பட்ட மாவட்டம். இம்மாவட்டம் கோயம்புத்தூர் மாவட்டத்தின் திருப்பூர், அவினாசி, பல்லடம், உடுமலைப்பேட்டை ஆகிய பிரிவுகளையும், ஈரோடு மாவட்டத்தின் தாராபுரம், காங்கேயம் ஆகிய பிரிவுகளையும் கொண்டு உருவாக்கப்பட்டது. திருப்பூர் நகரம் இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையகமாகும்.
இம்மாநகரம் ஆயத்த ஆடை தொழிலில் மிகவும் சிறந்து விளங்குகிறது. தமிழகத்தில் ஏழாவது பெரிய நகரமான திருப்பூர் வேகமாக வளர்ச்சியடைந்து வரும் ஒரு தொழில் நகரமாகும். திருப்பூர் மற்றும் அதன் சுற்றுப்புறங்களிலும் சுமார் 8 லட்சம் மக்கள் வசிக்கிறார்கள்.
திருப்பூரின் முக்கியச் சாலைகளாகக் குமரன் சாலை, அவிநாசி சாலை, பெருமாநல்லூர் சாலை, காங்கயம் சாலை, பல்லடம் சாலை, மங்கலம் சாலை உள்ளிட்ட சாலைகள் விளங்குகின்றன. இவற்றுள் குமரன் சாலை மிக முக்கியச் சாலையாக விளங்குகிறது.
தொழில் துறையில் தமிழகத்தில் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் நகரம் திருப்பூர். லட்சக்கணக்கான மக்களுக்கு வாழ்வளித்த , வாழ்வளிக்கும் நகரம் திருப்பூர் . தென்மாவட்டம் மற்றும் பிற மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் பணிபுரிகிறார்கள் . ஆண்டு தோறும் பத்து ஆயிரம் கோடிக்கும் மேலான அந்நிய செலவாணியை ஈட்டித் தருகிறது.