தமிழகம்

1.தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் கூடுதலாக கவனித்து வந்த அரசு நிர்வாகம் & ஊழியர்கள் மீதான லஞ்சப்புகார்களை விசாரிக்கும் விழிப்புபணி ஆணையாளரர் பொறுப்பு,உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டியிடம் கூடுதலாக ஒப்படைக்கப்பட்டுள்ளது.


இந்தியா

1.2018ம் ஆண்டு , போரினால் ஊனமுற்றோர் (Year of War Disabled) ஆண்டாக கடைபிடிக்கப்படும் என ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.
2.CRPF படையின், மாவோயிஸ்ட் எதிர்ப்பு அணியின் தலைமையகம் கொல்கத்தாவிலிருந்து சட்டீஸ்கர் மாநிலத்தின் ராய்ப்பூருக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.CRPF படைப்பிரிவின் தலைமையகம் டெல்லியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
3.ஜனாதிபதியின் பத்திரிகை செயலாளராக பணியாற்றி வந்த வேணு ராஜமோனி ( Venu Rajamony ) நெதர்லாந்துக்கான இந்திய தூதராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
4.உலக உணவு பாதுகாப்பு குழுவின் உறுப்பினராக M.S. சுவாமிநாதன் அறக்கட்டளை தலைவர் டாக்டர். மதுரா சுவாமிநாதன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
5.மகாராஷ்டிரா அரசு அதிக கொழுப்பு, உப்பு, இனிப்பு கொண்ட உணவுகளை பள்ளி சிற்றுண்டிகளில் விற்பனை செய்ய தடை விதித்துள்ளது.


விளையாட்டு

1.ஐக்கிய அரபு அமீரகத்தின் கால்பந்து குழுவான அல்-புஜைரா அணியின் தலைமை பயிற்சியாளராக அர்ஜெண்டினா கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் மாரடோனா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
2.பெண்கள் கிரிக்கெட் வரலாற்றில் ஒருநாள் போட்டியில் 181 விக்கெட்டுக்கள் வீழ்த்தி, அதிக விக்கெட் வீழ்த்திய வீராங்கனை என்ற பெருமையை இந்திய வீராங்கனை ஜுலன் கோஸ்வானி பெற்றுள்ளார்.இதற்கு முன் ஆஸ்திரேலிய வீராங்கனை கேத்ரின் 180 விக்கெட்டுக்கள் வீழ்த்தியதே சாதனையாக இருந்தது.இந்த சாதனை தற்போது முறியடிக்கப்பட்டுள்ளது.2002-ம் ஆண்டு ஒருநாள் போட்டியில் அறிமுகமான கோஸ்வாமி இதுவரை 153 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்.


இன்றைய தினம்

1.கொலம்பஸ் தனது கடைசி கடற் பயணத்தை மேற்கிந்தியத் தீவுகளுக்கு ஆரம்பித்த நாள் 11 மே 1502.
2.மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் காட்லீப் டைம்லர், கார்ல் பென்ஸ் ஆகியோரினால் ஆரம்பிக்கப்பட்ட நாள் 11 மே 1924.
3.முதலாவது கருத்தடை மாத்திரை அறிமுகமான நாள் 11 மே 1960.

 

– தென்னகம்.காம் செய்தி குழு