தமிழகம்

1.சென்னையில் நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில்  (டிரேட் சென்டரில்) வரும் மார்ச் 16-ம் தேதி சர்வதேச பொறியியல் வள கண்காட்சி (ஐஇஎஸ்எஸ்) நடைபெற இருக்கிறது.இது 6-வது சர்வதேச பொறியியல் வள கண்காட்சியாகும்.ரஷ்ய வர்த்தக அமைச்சகத்தின் ஆதரவுடன் இந்த கண்காட்சி நடைபெறுகிறது.மூன்று நாட்கள் இந்த கண்காட்சி நடைபெற உள்ளது.
2.திருவாரூர் சோமசுந்தரம் பூங்காவில் மனுநீதிச் சோழன் நினைவு மண்டபம் தமிழக முதல்வரால் கடந்த மார்ச் 07-ஆம் தேதி திறந்து வைக்கப்பட்டது.


இந்தியா

1.தாமிரபரணியின் உற்பத்தி கேந்திரமான பொதிகை மலை தற்போது வறட்சியின் பிடியில் இருப்பதால் இந்த மலைக்கு ஆன்மிக யாத்திரை செல்ல, கேரள அரசு தடை விதித்துள்ளது.
2.உலக மகளிர் தினம் கடந்த மார்ச் 08-ஆம் தேதி கொண்டாடப்பட்டது.இத்தினத்தை முன்னிட்டு சென்னை விமான நிலையத்தில் இருந்து மார்ச் 08-ஆம் தேதி காலை 6.20 மணிக்கு டெல்லி புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தை தீபா என்ற விமானி இயக்கினார்.துணை விமானி ஸ்ருதி மற்றும் 5 பணிப்பெண்கள் விமானத்தில் இருந்தனர்.இதையடுத்து காலை 6.50 மணிக்கு சிங்கப்பூருக்கு புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தை கவிதா ராஜ்குமார் என்ற விமானி இயக்கினார். துணை விமானி நான்சி மற்றும் 5 பணிப்பெண்கள் விமானத்தில் இருந்தனர்.
3.மேம்படுத்தப்பட்ட கூடுதல் பாதுகாப்பு அம்சங்களோடு புதிய 10 ரூபாய் நோட்டுகளை இந்திய ரிசர்வ் வங்கி விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.இந்த புதிய ரூபாய் நோட்டில் ஆளுநர் உர்ஜித் பட்டேலின் கையெழுத்து இருக்கும்.இதற்கு முன்பு அச்சடிக்கப்பட்ட பழைய 10 ரூபாய் நோட்டுகளும் புழக்கத்தில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
4.மூத்த பத்திரிகையாளரான அர்விந்த் பத்மநாபன் (49), கடந்த மார்ச் 08-ஆம் தேதி மாரடைப்பால் டெல்லியில் காலமானார்.
5.பிரதமரின் உஜ்வாலா யோஜனாவின் கீழ் இலவச சமையல் எரிவாயு இணைப்புப் பெற வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள பிரிவில் வரும் பெண்களுக்கும் ஆதார் எண் கட்டாயம் என மத்திய பெட்ரோலியம் மற்றும் எரிவாயு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
6.இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தால் (இஸ்ரோ) நிலவுக்கு அனுப்பப்பட்ட சந்திரயான் – 1 விண்கலம் மாயமாகிவிட்டதாக கூறப்பட்டது.ஆனால் அது இன்னமும் நிலவைச் சுற்றி வந்து கொண்டிருப்பதாக நாஸா கண்டுபிடுத்துள்ளது.மேலும் நிலவிலிருந்து 200 கிலோ மீட்டர் தொலைவில் அந்த விண்கலம் சுற்றிக் கொண்டிருப்பதாகவும் நாஸா தெரிவித்துள்ளது.
7.கேரள காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியிலிருந்து வி.எம். சுதீரன் நேற்று ராஜினாமா செய்துள்ளார்.உடல்நலக்குறைவு காரணமாக இந்த முடிவெடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.


வர்த்தகம்

1.ரிலையன்ஸ் கேபிடல் நிறுவனம் பேடிஎம் நிறுவனத்தில் வைத்திருக்கும் ஒரு சதவீத பங்குகளை அலிபாபா நிறுவனத்திடம் விற்றுள்ளது.இதன் மதிப்பு ரூ.275 கோடி ஆகும்.


உலகம்

1.உலக மகளிர் தினம் கடந்த மார்ச் 08-ஆம் தேதி கொண்டாடப்பட்டது.இதன் கருப்பொருள் – Women in the Changing World of Work : Planet 50-50 by 2030 ஆகும்


இன்றைய தினம்

1.முதல் ஆங்கில நாளிதழான தெ டெய்லி குராண்ட் (The Daily Courant) லண்டனில் வெளியிடப்பட்ட நாள் 11 மார்ச் 1702.
2.அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்திய நாள் 11 மார்ச் 1861.
3.ரஷ்யாவின் தலைநகரம் பெத்ரோகிராட்டில் இருந்து மாஸ்கோவுக்கு மாறிய நாள் 11 மார்ச் 1918.

 

– தென்னகம்.காம் செய்தி குழு