தமிழகம்

1.சென்னையில் வாகன நிறுத்தம் இல்லாத ஹோட்டல்களை மூட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது.லோகு என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில் உயர் நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.
2.தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் வரும் 27ஆம் தேதிக்குள் சீமைக் கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது.


இந்தியா

1.2017 -19 -ஆம் ஆண்டுக்கான சீன -இந்திய ஆராய்ச்சித் திட்டத்தின் தலைவராக, சென்னை ஐஐடி உதவிப் பேராசிரியர் ஜோ தாமஸ் கரக்கட்டு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.


உலகம்

1.அமெரிக்காவின் புதிய அட்டார்னி ஜெனரலாக அலபாமா மாகாணத்தைச் சேர்ந்த ஜெப் செசன்ஸ் என்னும் செனட் சபை எம்.பி.யை டிரம்ப் நியமித்தார். ஆனால் அவரது நியமனம் பெருத்த சர்ச்சையை எழுப்பியது.எனவே வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.இந்த வாக்கெடுப்பில் ஜெப் செசன்ஸ் நியமனத்துக்கு ஆதரவாக 52 ஓட்டுகள் கிடைத்தன. எதிராக 47 ஓட்டுகள் விழுந்தன. இதனால் அவரது நியமனத்துக்கு செனட் சபையின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.
2.ஓலா நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி(சிஎப்ஓ) ராஜிவ் பன்சால் மற்றும் தலைமை மார்க்கெட்டிங் அதிகாரி ரகுவேஷ் சரப் ஆகியோர் ராஜினாமா  செய்துள்ளனர்.நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் மற்றும் ஓலா மணியின் தலைவர் பல்லவ் சிங், தற்காலிக தலைமை நிதி அதிகாரியாக இருப்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
3.நெதர்லாந்தில் உள்ள சிறைகளில் கைதிகளே இல்லாததால் கைதிகள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சிறைசாலை அகதி இல்லமாக மாற்றப்பட்டுள்ளது.


வர்த்தகம்

1.பங்குச்சந்தை ஒழுங்கு முறை ஆணையத்தின் (செபி) தலைவராக நிதி அமைச்சகத்தில் கூடுதல் செயலாளராக உள்ள அஜய் தியாகி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.தற்போது பங்குச்சந்தை ஒழுங்கு முறை ஆணையத்தின் (செபி) தலைவராக இருந்த யூ.கே. சின்ஹாவின் பதவிக் காலம் அடுத்த மாதம் ஒன்றாம் தேதியுடன் முடிவடைய உள்ளது.எனவே புதிய தலைவராக அஜய் தியாகி நியமிக்கப்பட்டுள்ளார். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய  அமைச்சரவை நியமன குழு தியாகியின் நியமனத்திற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.58 வயதான அஜய் தியாகி உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார்.
2.மத்திய அரசுக்கு சொந்தமான எல்.ஐ.சி. நிறுவனத்தின் புதிய நிர்வாக இயக்குநராக ஹேமந்த் பார்கவா நியமிக்கப்பட்டுள்ளார்.இவர் தற்போது எல்.ஐ.சி. நிறுவனத்தின் தில்லி அலுவலகத்தில் மண்டல மேலாளராகப் பணியாற்றி வந்தார்.இவர் அப்பதவியில், வரும் 2019-ஆம் ஆண்டு ஜூலை 31-ஆம் தேதி வரையில் நீடிப்பார். இதற்கான ஒப்புதலை மத்திய அமைச்சரவைக் குழு வழங்கியது.


இன்றைய தினம்

1.இன்று தாமஸ் ஆல்வா எடிசன் பிறந்த தினம் (Thomas Alva Edison Birth Anniversary Day).
தாமஸ் ஆல்வா எடிசன், 1847ஆம் ஆண்டில், பிப்ரவரி 11 அன்று அமெரிக்காவில் பிறந்தார். படிக்காதமேதை, பட்டம் பெறாதவர். ஆனால் கண்டுபிடிப்புகளின் சக்கரவர்த்தியாக விளங்கினார். மிக அதிகப்படியான கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி உலக சாதனை படைத்தவர். இவரின் கண்டுபிடிப்புகளுக்காக 1093 பதிவுரிமைகளைப் பெற்றார்.
2.லண்டன் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்ட நாள்  11 பிப்ரவரி 1826.
3.ராபர்ட் ஃபுல்ட்டன் நீராவிப் படகுக்கான காப்புரிமம் பெற்ற நாள்  11 பிப்ரவரி 1809.
4.தென்னாபிரிக்காவில் நெல்சன் மண்டேலா 27 ஆண்டுகள் சிறைவாசத்தின் பின்னர் விடுதலையான நாள்  11 பிப்ரவரி 1990.
5.ஜெர்மனியின் முதல் 24 மணி நேரத் தமிழ் வானொலியான ஐரோப்பியத் தமிழ் வானொலி ஆரம்பிக்கப்பட்ட நாள்  11 பிப்ரவரி 2005.

 

– தென்னகம்.காம் செய்தி குழு