Current-Affair-Logo

தமிழகம்

1.தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் எடுக்கும் திட்டத்தை கைவிடப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
2.நடிகர் சிவக்குமாரின் 75வது பிறந்தநாளை முன்னிட்டு, அவர் வரைந்த 140 ஓவியங்கள் தொகுக்கப்பட்டு, Paintings Of Sivakumar – A Unique Collections என்ற பெயரில் புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது.

இந்தியா

1.நாடு முழுவதுமுள்ள நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கக் கட்டணம் நவம்பர் 11ம் தேதி நள்ளிரவு வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
2.www.rbi.org.in என்ற இணையதளத்தில் ரூ. 500, ரூ. 1000 நோட்டுகள் குறித்த சந்தேகங்களுக்கு ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது.மேலும் இதுபற்றி  விளக்கம் அளிப்பதற்காக ரிசர்வ் வங்கி உதவி மையம் திறக்கப்பட்டுள்ளது.
3.இன்று முதல் புதிய ரூபாய் நோட்டுகளை பொது மக்களிடம் புழக்கத்திற்கு கொண்டு வருவதற்கு வசதியாக, பிற வங்கிகளின் ஏ.டி.எம்-களை பயன்படுத்துவதற்கான கட்டணத்தை ரத்து செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
4.டாடா கல்சன்டன்ஸி நிறுவனத்தின் புதிய தலைவராக இஷாந்த் ஹுசைனை டிசிஎஸ் நியமித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
5.இன்று தேசிய கல்வி தினம்(National Education Day).
சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் மவுலானா அபுல்கலாம் ஆசாத் பிறந்த தினமான நவம்பர் 11-ம் தேதி அவரை கவுரவிக்கும் பொருட்டு “தேசிய கல்வி தினமாக” கொண்டாடப்படுகிறது.

உலகம்

1.அமெரிக்காவின் 45-ஆவது அதிபராகப் பொறுப்பேற்க உள்ள டொனால்ட் டிரம்ப் அந்நாட்டில் அதிக வயதில் (70) அதிபராகும் நபர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
2.ஆண்டுதோறும் நவம்பர் 10ம் தேதியை,பாகிஸ்தான் சிறுமி மலாலாவின் தினமாக கொண்டாடப்படும் என்று ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் தெரிவித்துள்ளார்.

விளையாட்டு

1.அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் இந்தியாவில் நடைபெறும் பார்வையற்றோருக்கான டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தூதராக இந்திய அணி முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் திராவிட் நியமிக்கப்பட்டுள்ளார்.