தமிழகம்

1.மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு பாரத  ரத்னா விருது வழங்க வேண்டும் என்று மத்திய அரசினை வலியுறுத்தி தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.மேலும் எம்.ஜி.ஆர் நினைவிடத்தின் பெயரை மாற்ற வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நேற்றைய அமைச்சரவை கூட்டடத்தில் நிறைவேற்றப்பட்டது.இந்த கூட்டம் முதல்வர் ஓ .பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது.
2.மறைந்த முன்னாள் முதல்வர்  ஜெயலலிதாவிற்கு 15 கோடி ருபாய் செலவில் நினைவிடம் அமைக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக தமிழக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.


இந்தியா

1.என்எல்சி இந்தியா நிறுவனத்தின் மனிதவளத் துறை புதிய இயக்குநராக ஆர்.விக்ரமன் கடந்த டிசம்பர் 8-ம் தேதி பொறுப்பேற்றுக்கொண்டார்.
2.மகாராஷ்டிரா மாநில அரசு பணமில்லா வர்த்தகத்தை ஊக்குவிக்க Maha Wallet எனும் மின்னணு பண பரிமாற்றத்தை அறிமுகம் செய்துள்ளது.
3.கர்நாடகா மாநில அரசு பாலூட்டும் தாய்மார்களுக்கு குழந்தை பிறந்த நாள் முதல் 1000 நாட்களுக்கு மதிய உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கியுள்ளது.மேலும் எடை குறைந்த மற்றும் வளர்ச்சி குறைந்த குழந்தைகளை கண்டறிய Infosys நிறுவனத்துடன் இணைந்து child tracking system ஏற்படுத்தியுள்ளது.


உலகம்

1.நேட்டோ நாடுகள், இஸ்ரேல் ஆகியவைகளுக்கு இணையாக இந்தியாவையும் அமெரிக்காவின் முக்கிய ராணுவ கூட்டாளியாக்க வகை செய்யும் சட்டத்துக்கு அந்த நாட்டு நாடாளுமன்றம் தனது ஒப்புதலை தந்துள்ளது.
2.பிரபல அமெரிக்க விண்வெளி வீரர் ஜான் கிளென் (95) , கடந்த டிசம்பர் 8-ம் தேதி காலமானார்.அமெரிக்க விண்வெளி ஆய்வுத் திட்டத்தின் கீழ் பறக்கத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் ஏழு வீரர்களில் இவரும் ஒருவராவார்.
3.தெற்கு சூடானுக்கான ஐ.நா. அமைதி அமைப்பின் தலைவராக நியூசிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர் டேவிட் ஷீரர் ( David Shearer ) நியமிக்கப்பட உள்ளதாக ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூன் தெரிவித்துள்ளார்.
4.2016ம் ஆண்டின் சிறந்த மனிதராக டைம் பத்திரிகை அமெரிக்க அதிபராக தேர்வு பெற்றுள்ள டொனால்ட் டிராம்ப் ஐ தேர்வு செய்துள்ளது.
5.உலகின் முதல் மருத்துவமனை ரயிலான Life Line Expressல் புற்றுநோய் மற்றும் குடும்ப நல சிகிச்சைக்காக கூடுதலாக இரண்டு பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.இந்த ஆண்டு Life Line Expressன் 25வது ஆண்டு ஆகும்.


வர்த்தகம்

1.இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் அதிகளவு பங்குகளை பெற்று தென் கொரிய ஸ்மார்ட்போன் நிறுவனமான சாம்சங் முதலிடம் பிடித்துள்ளது.ஆப்பிள் நிறுவனம் இரண்டாவது இடத்தையும்,மோட்டோரோலா நிறுவனம் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன.


முக்கிய தினங்கள்/வாரங்கள்

1.இன்று சர்வதேச மலைகள் தினம் (World Mountain Day).
மலைகளைப் பாதுகாக்கவும், மலைப்பிரதேசங்களில் வாழும் மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தவும், மலையின் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், 2002ஆம் ஆண்டில் மலைகளின் கூட்டாளி என்கிற அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பு உலகம் முழுவதும் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. இவ்வமைப்பின் முயற்சியால் ஐ.நா. சபை 2002ஆம் ஆண்டு டிசம்பர் 11 ஐ சர்வதேச மலைகள் தினமாக அறிவித்தது.
2.இன்று கர்நாடக இசைப் பாடகி எம்.எஸ். சுப்புலட்சுமி இறந்த தினம்.இவர் இறந்த தேதி 11 டிசம்பர் 2004.
3.இன்று தமிழகக் கவிஞர், ஊடகவியலாளர் பாரதியார் பிறந்த தினம்.இவர் பிறந்த தேதி 11 டிசம்பர் 1882.
4.அப்பல்லோ 17 சந்திரனில் இறங்கிய நாள் 11 டிசம்பர் 1972.
5.இன்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பிறந்த நாள்.இவர் பிறந்த தேதி 11 டிசம்பர் 1935.