இந்தியா

1.இந்தியா , அமெரிக்கா மற்றும் ஜப்பான் கடற்படைகள் இணைந்து மேற்கொள்ளும் மலபார் பயிற்சி சென்னையை தலைமையிடமாக கொண்டு வங்காள விரிகுடாவில் ஜூலை 10 முதல் ஜூலை 17 வரை நடைபெறுகிறது.
2.தெலுங்கானா மாநில அரசின் Telangana Social Welfare Residential Educational Institutions Society (TSWREIS) சார்பில் ஹைதராபாத்தில் தலித் பல்கலைக்கழகம் அமைக்கப்பட உள்ளது.


உலகம்

1.யுனெஸ்கோ இந்தியாவின் முதல் பாரம்பரிய நகரமாக அகமதாபாத்தை தேர்வு செய்துள்ளது .போலந்தில் நடைபெற்ற யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய கமிட்டியின் 41வது கூட்டத்தில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
2.அணு ஆயுதங்களை தடைச் செய்யும் ஐ.நா.வின் சர்வதேச ஆயுத தடை ஒப்பந்தம் 122 நாடுகளின் ஆதரவுடன் நிறைவேறியது.நெதர்லாந்து எதிர்த்து வாக்களித்தது.சிங்கப்பூர் வாக்களிக்கவில்லை (abstaining).
அணு ஆயுத நாடுகளான அமெரிக்கா, ரஷ்யா, இந்தியா, இஸ்ரேல், சீனா, பிரான்ஸ், பிரிட்டன், வடகொரியா, பாகிஸ்தான் ஆகியவை இந்த வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்தன.
3.இங்கிலாந்தின் குளூசெஸ்ட்டர்ஷைர் பகுதியை சேர்ந்தவர் பைகே ,பெண்ணாக பிறந்து, ஆணாக மாறிய திருநம்பி (ஹேடன் ராபர்ட் கிராஸ் என்று தனது பெயரை மாற்றிக் கொண்டார்) ஆவார்.இவர் தற்போது தானமாக பெற்ற விந்தணு மூலம் பெண் குழந்தையை பெற்றுள்ளார்.


இன்றைய தினம்

1.இன்று உலக மக்கள் தொகை தினம் (World Population Day).
உலக மக்கள் தொகை 1987ஆம் ஆண்டில் 500 கோடியானதை முன்னிட்டு ஐ.நா. சபை ஜூலை 11 ஐ உலக மக்கள் தொகை தினமாக அறிவித்தது. பெருகிவரும் மக்கள் தொகையால் வனப்பகுதிக்கும், அதில் வாழும் உயிரினங்களுக்கும் ஆபத்து ஏற்படுகிறது. மனிதர்கள் வாழ்வதற்கான இட நெருக்கடியும் ஏற்படுகிறது. இதுபோன்ற பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என்கிற நோக்கில் இத்தினம் கொண்டாடப்படுகிறது.
2.1936 – நியூயோர்க் நகரில் டிறைபரோ பாலம் திறக்கப்பட்டது.
3.1987 – உலக மக்கள் தொகை 5 பில்லியனைத் தாண்டியது.

 

– தென்னகம்.காம் செய்தி குழு