current-affairs

தமிழகம்

1.தமிழ்நாடு தலைமைக் கணக்காயராக (பொருளாதாரம் மற்றும் வருவாய்துறை தணிக்கை) ஆர்.திருப்பதி வெங்கடசாமி பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்தியா

1.உலகின் முதல் மின்னணு கழிவறை திருவனந்தபுரத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
2.இந்தியாவிலேயே பகுதிநேர ஊழியர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்ட முதல் மாநிலம் என்ற பெருமையை இராஜஸ்தான் பெற்றுள்ளது.

உலகம்

1.இன்று உலக மக்கள் தொகை நாள்.(World Population Day).உலக மக்கள் தொகை நாள் என்பது ஆண்டுதோறும் ஜூலை 11 மக்கள் தொகை குறித்த விழிப்புணர்வை உலகளாவிய ரீதியில் மக்களுக்கு எடுத்துச் செல்லும் ஒரு முயற்சியாக ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்தினால் கொண்டாடப்பட்டு வருகிறது. 1987 ஆம் ஆண்டில் இதே நாளிலேயே உலக மக்கள் தொகை ஐந்து பில்லியனைத் தாண்டியது.
2.அமெரிக்காவின் நாசா அமைப்பால் சமீபத்தில் அனுப்பப்பட்ட ஜூனோ விண்கலம் வியாழன் கிரகத்தை பற்றி ஆய்வு செய்ய அனுப்பப்பட்டது.
3.நியூயார்க் நகரில் டிறைபரோ பாலம் திறக்கப்பட்ட நாள் 11 ஜூலை 1936.

விளையாட்டு

1.விம்பிள்டன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இங்கிலாந்து வீரர் ஆன்டி முர்ரே 2–வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.ஆன்டி முர்ரே 6–4, 7–6 (7–3), 7–6 (7–2) என்ற நேர் செட் கணக்கில்  கனடா  வீரர்  ராவ்னிக்கை வீழ்த்தி விம்பிள்டன் பட்டத்தை சொந்தமாக்கினார்.பெண்கள் ஒற்றையரில் செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா),ஏஞ்சலிக் கெர்பரை (ஜெர்மனி) எதிர்கொண்டார்.இந்த ஆட்டத்தில் செரீனா வில்லியம்ஸ் 7–5, 6–3 என்ற நேர்செட்டில் ஏஞ்சலிக் கெர்பரை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை மீண்டும் தனதாக்கினார்.இதன் மூலம் 22–வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற ஜெர்மனி வீராங்கனை ஸ்டெபி கிராப்பின் சாதனையை சமன் செய்தார்.பெண்கள் இரட்டையர் பிரிவில் செரீனா வில்லியம்ஸ்,வீனஸ் வில்லியம்சும் இணைந்து டைமியா பாபோஸ் (ஹங்கேரி)– ஷிவ்டோவா (கஜகஸ்தான்) இணையை எதிர்கொண்டனர்.இதில் வில்லியம்ஸ் சகோதரிகள் 6–3, 6–4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று பட்டத்தை தட்டிச் சென்றனர்.