இந்தியா

1.DRDO அமைப்பின் சார்பில் நீண்டதூர ஏவுகணைகள் பரிசோதனை தளத்தை, அந்தமானில் உள்ள Rutland தீவில் அமைக்க தேசிய வனவிலங்கு வாரியம் அனுமதி அளித்துள்ளது.
2.Rural LED Street Lighting National Project (SLNP)ன் படி , தெருவிளக்குகளை LED விளக்குகளாக மாற்றும் திட்டம், ஆந்திராவின் 7 மாவட்டங்களில் துவங்கப்பட்டுள்ளது.இத்திட்டதின்கீழ் ஆந்திராவில் 10 லட்சம் LED விளக்குகள் பொருத்தப்பட உள்ளன.
3.மத்திய பிரதேசம்., போபாலின் புறநகர்ப்பகுதியில் உள்ள ஹபீப்கஞ்ச் ரயில்நிலையம், இந்தியாவின் முதல் தனியார் பங்களிப்பு ரயில் நிலையமாக (Public – Private Partnership – PPP) மாற்றப்பட்டுள்ளது.இந்த நிலையத்தின் செயல்பாட்டு மற்றும் பராமரிப்பு பொறுப்புகளை போபாலை சார்ந்த Bansal Group க்கு எட்டு ஆண்டுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.மேலும் நான்கு நிலப்பகுதிகள் 45 ஆண்டுகள் குத்தகைக்கு விடப்பட்டுள்ளது.
4.பிளாஸ்டிக், கண்ணாடி மற்றும் தெர்மோகோல் பயன்பாட்டை குறைத்து, எளிதில் மக்கும் பொருட்களை திருமணங்களில் பயன்படுத்த கேரளா அரசு Green Protocol என்னும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.


உலகம்

1.மங்கோலிய பல்கலைக்கழகத்தின் சார்பில் முதன்முறையாக உருவாக்கப்பட்டுள்ள சாட்டிலைட்ற்கு, கோபி பாலைவன கரடியான Mazaalai பெயர் சூட்டப்பட்டுள்ளது.


இன்றைய தினம்

1.1991 – ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் பேரறிவாளன் சிறையில் அடைக்கப்பட்டார்.

 

– தென்னகம்.காம் செய்தி குழு