தமிழகம்

1.இந்தியா டுடே ஊடக நிறுவனத்தின் இரண்டு நாள் மாநாடு , சென்னையில் ஜனவரி 09 மற்றும் ஜனவரி 10-ம் தேதி நடைபெற்றது.இந்த மாநாட்டை அதிமுகவின் பொதுச் செயலாளர் சசிகலா துவங்கி வைத்தார்.சசிகலா அதிமுக பொதுச் செயலாளராக பதவியேற்ற பின் கட்சி சார்ந்த நிகழ்ச்சி அல்லாமல் பங்குபெற்ற முதல் பொது நிகழ்ச்சி இதுவாகும்.


இந்தியா

1.மத்திய அரசின் கட்டாய விடுமுறை பட்டியலில் இருந்து பொங்கல் பண்டிகை கடந்த ஜனவரி 9-ம் தேதி  நீக்கப்பட்டது.இதற்கு தமிழகத்தில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது.இதையடுத்து பொங்கல் கட்டாய அரசு விடுமுறை பட்டியலில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது.தசரா பண்டிகைக்கு பதிலாக, பொங்கல் பண்டிகை கட்டாய விடுமுறை பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
2.இந்தி நடிகர் அமிதாப்பச்சன் காசநோய் பிரசார தூதராக செயல்பட்டு வருகிறார். அவரது இந்த மகத்தான சேவையை கவுரவிக்கும் பொருட்டு, அமெரிக்க தூதரகம் விருது வழங்கி பெருமைப்படுத்தியுள்ளது.
3.ரெயில் டிக்கெட்டுகளை வேகமாக முன்பதிவு செய்வதற்கு வசதியாக ஐஆர்சிடிசி  புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.’ஐஆர்சிடிசி ரெயில்வே கனெக்ட்’  என்ற இந்த செயலியை ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
4.பிளைட்ஸ்டாட்ஸ் என்ற நிறுவனம் விமான நிறுவனங்களின் சேவை குறித்து சமீபத்தில் நடத்திய ஆய்வில் உலகில் மோசமான சேவை வழங்கும் விமான நிறுவனங்களில் ஏர் இந்தியா நிறுவனம் 3-வது இடத்தைப் பிடித்துள்ளது.முதலிடத்தை இஎல் ஏஎல் நிறுவனமும், 2-வது இடத்தை ஐஸ்லேண்ட் ஏர் ஏர்லைன்ஸ் நிறுவனமும் பிடித்துள்ளன. மேலும் 2016-ம் ஆண்டில் சிறந்த சேவை வழங்கிய விமான நிறுவனங்கள் பட்டியலில் கேஎல்எம் நிறுவனம் முதலிடத்தையும், இபேரியா நிறுவனம் 2-வது இடத்தையும் பிடித்துள்ளன.
5.குஜராத் தலைநகர் அகமதாபாத்தில் நோபல் பரிசு கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்துள்ளார்.


உலகம்

1.நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து செலுத்தக் கூடிய அணுஆயுத வல்லமை கொண்ட ஏவுகணையை, பாகிஸ்தான் கடந்த 09-ம் தேதி வெற்றிகரமாக பரிசோதித்தது.இந்த ஏவுகணைக்கு “பாபர்-3” என்று பெயரிடப்பட்டுள்ளது.மேலும் நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து செலுத்தக் கூடிய வகையில் உருவாக்கப்பட்ட பாகிஸ்தானின் முதல் ஏவுகணை இதுவாகும்.
2.அமெரிக்காவின் வெள்ளை மாளிகையின் மூத்த ஆலோசகராக தனது மருமகனான ஜேரட் குஷ்னர்(35), என்பவரை அந்நாட்டின் வருங்கால அதிபர் டொனால்ட் டிரம்ப் நியமித்துள்ளார்.
3.உலகளவில் பிரபலமான கோல்டன் குளோப் விருது விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் மாநிலத்தில் உள்ள பெவர்லி ஹில்ஸ் பகுதியில் நடைபெற்றது.இதில் கோல்டன் குளோப் விருதுகள் வரலாற்றில் முதல்முறையாக 7 விருதுகளை அள்ளிச்சென்ற ‘லா லா லேன்ட்’ திரைப்படம் பிரிட்டன் நாட்டின் மிக உயரிய ‘பாப்டா’ விருதுக்கும் 11 பிரிவுகளின்கீழ் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
4.நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து பாயும் ‛பாபர்-3′ அணுஆயுத ஏவுகணையை, பாகிஸ்தான் பரிசோதனை செய்ததாக வெளியிட்ட வீடியோ போலியானது என இந்திய கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.ஏனெனில் இந்த ஏவுகணை சோதனை இந்தியப் பெருங்கடலில் நடத்தப்பட்டதாக தெரிவித்த பாகிஸ்தான்  எப்பகுதியில் நடத்தப்பட்டது என்ற விவரத்தை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


வர்த்தகம்

1.மும்பை பங்குச்சந்தை , மியூச்சுவல் பண்ட் வர்த்தகத்திற்காக BSE STAR MF என்ற செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.


விளையாட்டு

1.ஜம்மு காஷ்மீர் மாநலிம் ரஜோரியைச் சேர்ந்த 8 வயது சிறுவனான அப்பு அமாஸ் , தேசிய அளவில் நடத்தப்பட்ட தாய் பாக்சிங் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இதன்மூலம், இவர் இளம் வயதில் தேசிய பாக்சிங் சாம்பியன் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
2.மும்பையில் வரும் 15-ம் தேதி  நடைபெற உள்ள 14-வது மாரத்தானுக்கான சர்வதேச தூதராக கென்யாவின் டேவிட் ருடிஷா நியமிக்கப்பட்டுள்ளார்.இவர் ரியோ டி ஜெனீரோவில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப்பதக்கம் வென்றவர் ஆவார்.
3.மும்பையில் நடைபெற்று வரும் இங்கிலாந்து லெவன் அணிக்கெதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்தியா ‘ஏ’ அணியின் கேப்டனாக டோனி நியமிக்கப்பட்டிருந்தார்.கேப்டனாக டோனி பங்கேற்கும் கடைசி போட்டி என்பதால் பயிற்சி ஆட்டத்தை காண ஏராளமான ரசிகர்கள் திரண்டிருந்தனர்.


இன்றைய தினம்

1.இன்று கொடிகாத்த குமரன் இறந்த தினம்.
திருப்பூர் குமரன் (அக்டோபர் 4, 1904 – ஜனவரி 11, 1932) இந்திய விடுதலைப் போராட்ட தியாகி ஆவார். இவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள் சென்னிமலையில் பிறந்தார். 1932 ஆம் ஆண்டு சட்ட மறுப்பு இயக்கம் மீண்டும் தொடங்கிய போது தமிழகம் முழுவதும் அறப்போராட்டம் பரவிய நேரத்தில் திருப்பூரில் தேசபந்து இளைஞர் மன்ற உறுப்பினர்கள் அச்சமயம் ஏற்பாடு செய்த மறியல் போராட்டத்தில் தீவிரமாகப் பங்குகொண்டு, 1932 ஆம் ஆண்டு ஜனவரி 10 ஆம் தேதியன்று கையில் தேசியக் கொடியினை ஏந்தி, தொண்டர் படைக்குத் தலைமை ஏற்று, அணிவகுத்துச் சென்றபோது காவலர்களால் தாக்கப்பட்டு தடியடிபட்டு மண்டை பிளந்து கையில் இந்திய தேசியக் கொடியை ஏந்தியபடி மயங்கி விழுந்து, பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஜனவரி 11 இல் உயிர் துறந்தார் திருப்பூர் குமரன் . இதனால், கொடிகாத்த குமரன் என்றும் அழைக்கப்படுகிறார்.
2.முதலாவது குலுக்குச் சீட்டு இங்கிலாந்தில் பதிவாகிய நாள் 11 ஜனவரி 1569.
3.நீரிழிவுக்கு இன்சுலின் மருந்து முதன்முதலாக பயன்படுத்தப்பட்ட நாள் 11 ஜனவரி 1922.
4.பால் முதற்தடவையாக பாட்டிலில் அடைத்து விற்கப்பட்ட நாள் 11 ஜனவரி 1878.
5.கிழக்கு பாகிஸ்தான் வங்காளதேசம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்ட நாள் 11 ஜனவரி 1972.

 

– தென்னகம்.காம் செய்தி குழு