current-affairs

தமிழகம்

1.தமிழக காவல்துறை சட்டம் மற்றும் ஒழுங்கு டி.ஜி.பி. யாக புதிதாக டி.கே.ராஜேந்திரன் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.மேலும் சென்னை பெருநகர காவல்துறை ஆணையராக  மீண்டும் எஸ்.ஜார்ஜ் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.
2.இன்று மகாகவி சுப்பிரமணிய பாரதியார் மறைந்த நாள்.இவர் மறைந்த தேதி 11 செப்டம்பர் 1921.
3.புதுச்சேரி அரசின் துணைநிலை ஆளுநராக பொறுப்பேற்றுள்ள கிரண் பேடி அவர்கள் 100 நாட்களை நிறைவு செய்துள்ளார்.

இந்தியா

1.மாநில தகவல் ஆணையத்தின் செயல்பாடுகளை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் அக்டோபர் 6 முதல் அக்டோபர் 12 வரை தகவல் ஆணைய விழிப்புணர்வு வார விழா நடைபெற உள்ளது.
2.அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பா.ஜனதா தலைவர் சுப்பிரமணிய சாமிக்கு அமெரிக்க தமிழ்ச் சங்கம் ’தமிழ் ரத்னா’ விருது வழங்கியுள்ளது.ஏற்கனவே இந்த விருதை இயக்குனர் பாரதிராஜா, இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் ஆகியோர் பெற்றுள்ளனர்.

உலகம்

1.10 செப்டம்பர் 2001-ம் ஆண்டு அமெரிக்காவின் நியூயார்க் நகரில்  உலக வர்த்தக மையம் மற்றும் பெண்டகன் மீது நடத்தப்பட்ட வான் தாக்குதல்களில் மொத்தம் 2,974 பேர் கொல்லப்பட்டனர்.
2.மகாத்மா காந்தி சத்தியாக்கிரகம் என்ற சொற்பதத்தை தென்னாபிரிக்காவில் வன்முறையற்ற இயக்கத்தின் செயற்பாடுகளுக்கு பயன்படுத்த ஆரம்பித்த நாள் 10 செப்டம்பர் 1906.

விளையாட்டு

1.நியூயார்க்கில் நடைபெற்ற அமெரிக்க ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் முதல் இடத்தில் உள்ள ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பர் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.இவர் தன்னை எதிர்த்து விளையாடிய செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவாவை 6-3, 4-6, 6-4  என்ற செட் கணக்கில் தோற்கடித்து சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.அமெரிக்க ஓபன் கிராண்ட் ஸ்லாம் போட்டியில் பட்டம் பெறும் இரண்டாவது ஜெர்மனி வீராங்கனை ஏஞ்சலிக் கெர்பர் ஆவர்.இதற்கு முன்பு  ஸ்டெபி கிராப் பட்டத்தை கைப்பற்றி இருந்தார்.