இந்தியா

1.மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகளைக் காக்கும் ‘மனநலம் பராமரிப்பு சட்டம் -2017’ க்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் வழங்கியுள்ளார்.
2.போக்குவரத்து துறையில் பல்வேறு சீர்திருத்தங்களை உறுதி செய்யும் மோட்டார் வாகன சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நேற்று நிறைவேற்றப்பட்டது.மேலும் இந்த மசோதாவில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.
3.உத்தரபிரதேச மாநிலத்தில் ஏழைகளுக்காக ‘அன்னபூர்ணா போஜ்னாலயா’ என்று திட்டத்தை திறக்க அரசு முடிவு செய்துள்ளது.


வர்த்தகம்

1.கோவாவில் உள்ள விஜய் மல்லையாவுக்குச் சொந்தமான கிங்பிஷர் வில்லாவை நடிகரும் தொழிலதிபருமான சச்சின் ஜோஷி வாங்கியுள்ளார்.இந்த தகவலை பாரத ஸ்டேட் வங்கி வெளியிட்டுள்ளது.


உலகம்

1.ஆஸ்திரேலிய பிரதமர் மால்கோம் டர்ன்புல் முதல் முறையாக அரசு முறைப் பயணமாக இந்தியாவுக்கு வந்துள்ளார்.
2.ஸ்பெயின் நாட்டின் முதல் பெண் ராணுவ மந்திரி கார்மென் சாகோன்(46), கடந்த ஏப்ரல் 09-ஆம் தேதி காலமானார்.


இன்றைய தினம்

1.விளையாட்டு வர்ணனை முதன் முறையாக வானொலியில் ஒலிபரப்பான நாள் 11 ஏப்ரல் 1921.
2.இன்று மகாத்மா காந்தி மனைவி கஸ்தூரிபா பிறந்த தினம்.இவர் பிறந்த தேதி 11 ஏப்ரல் 1869.
3.ஆபிரகாம் லிங்கன் தனது கடைசி பேச்சை நிகழ்த்திய நாள் 11 ஏப்ரல் 1865.
4.ஐன்ஸ்டீன் தனது சார்புக் கோட்பாட்டை வெளியிட்ட நாள் 11 ஏப்ரல் 1905.
5.அப்போலோ 13 ஏவப்பட்ட நாள் 11 ஏப்ரல் 1970.

 

– தென்னகம்.காம் செய்தி குழு