Current-Affairs-Updates

தமிழகம்

1.மத்திய அரசு நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் (Neyveli Lignite Corporation Limited) என்ற பெயரை வெறும் என்.எல்.சி. இந்தியா லிமிடெட் (NLC India Limited) என  பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
2.திருச்சியில் நவீன வன மர விதை மையம் ஏற்படுத்தப்படும் என முதல்வர் ஜெயலலிதா சட்டப் பேரவையில் இன்று அறிவித்துள்ளார்.

இந்தியா

1.அருணாச்சல பிரதேச முன்னாள் முதல்வர் கலிக்கோ புல் ( Kalikho Pul ) மர்மமான முறையில் கடந்த 9-ம் தேதி உயிரிழந்தார்.இவர் 2016 பிப்ரவரி 19 ம் தேதி முதல் ஜூலை 16ம் தேதி வரை முதல்வராக பதவியில் இருந்தார்.
2.சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு, பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக தேசியச் சின்னங்கள் முன்பு ஒரு வார காலத்துக்கு செல்ஃபி எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
3.பிஹார், நாலந்தா மாவட்ட நிர்வாகம் கைலாசபுரி கிராமத்தில் உள்ள மொத்தம் 50 வீடுகள் மீதும் மதுவிலக்கை மீறிய குற்றத்திற்காக தலா ரூ.5,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

உலகம்

1.இன்று உலக மகள்கள் தினம்(Daughter’s Day).
2.பிரான்சிடம் இருந்து சாட் விடுதலையை அறிவித்தது.சாட் விடுதலை அடைந்த நாள் 11 ஆகஸ்டு 1960.

விளையாட்டு

1.இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீரர் சுஷில் குமார் ‘என்னுடைய ஒலிம்பிக் பயணம் (My Olympic Journey)’ என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.
2.சர்வதேச ஒலிம்பிக் கவுன்சிலின் உறுப்பினராக சமீபத்தில் தேர்வு செய்யப்பட்டவரான நீதா அம்பானி.ஒலிம்பிக் போட்டியில் மகளிர் 400 மீ. ஃப்ரீஸ்டைல் பிரிவில் முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்களுக்கு பதக்கம் அணிவித்தார்.இதன்மூலம், ஒலிம்பிக்கில் வென்றவர்களுக்கு பதக்கம் அணிவித்த முதல் இந்தியப் பெண் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் நீதா அம்பானி.
3.குஜராத் மாநிலம் கிர் சரணாலயத்தில் சிங்கங்களுடன் செல்ஃபி எடுத்து கொண்டதற்காக இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவுக்கு ரூ.20,000 அபராதம் விதிக்கப்பட்டது.