current-affairs

தமிழகம்

1.சென்னையில் வரும் 28-ம் தேதி நடைபெறும் இந்திய-ரஷ்ய திரைப்பட விழாவில் கடிதம் எழுதுவதை மறந்த இளைய சமுதாயத்தை பற்றி மதுரை இளைஞர் இயக்கிய ‘கடுதாசி’ குறும்படம் திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகி உள்ளது.

இந்தியா

1.குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மேற்கு வங்க மாநிலம், பஹரம்பூர் மாவட்டத்திலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நவகிராம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ராணுவதளத்தை கடந்த அக்டோபர் 8ம் தேதி திறந்து வைத்துள்ளார்.

உலகம்

1.பிரம்மபுத்திராவில் அணை கட்டுவதால் இந்தியாவின் நீர்வரத்தில்  எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்று சீனா தெரிவித்துள்ளது.
2.அமெரிக்காவின் மிகப் பெரும் பணக்காரர்களுக்கான பட்டியலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சிம்பொனி டெக்னாலஜி நிறுவனர் ரமேஷ் வாத்வானி, சின்டெல் பாரத் பணிசேவை நிறுவனர் நீரஜா தேசாய், விமான சேவைத் துறை ஜாம்பவான் ராஜேஷ் கங்வால், தொழிலதிபர் ஜான் கபூர், முதலீட்டு நிபுணர் கவிதார்க் ராம் ஸ்ரீராம் ஆகிய அமெரிக்க இந்தியர்கள் 2016-ஆம் ஆண்டுக்கான அமெரிக்காவின் மிகப் பெரும் 400 பணக்காரர்கள்’ பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.இவர்களில் கவிதார்க் ராம் ஸ்ரீராம் தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
3.இந்தியாவுக்கான புதிய சீனத் தூதராக லூ சாவ்ஹு நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை சீன அதிபர் ஜீ ஜின்பிங் பிறப்பித்துள்ளார்.
4.இன்று சர்வதேச பெண் குழந்தைகள் தினம் (International Day of the Girl Child).
பெண் குழந்தைகள் உலகம் முழுவதும் பாலின பாகுபாட்டால், சமத்துவமற்ற நிலையில் வாழ்ந்து வருகின்றனர். கல்வி, மருத்துவம், சட்ட உரிமை ஆகியவை மறுக்கப்படுகிறது. அது தவிர குழந்தை திருமணம், வன்கொடுமை போன்றவற்றால் பெண் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். பெண் குழந்தைகளுக்கு சமத்துவம் மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்த அக்டோபர் 11 ஐ சர்வதேச குழந்தைகள் தினமாக ஐ.நா. சபை 2011இல் அறிவித்தது.

வர்த்தகம்

1.ஒரே மாதத்தில்(கடந்த செப்டம்பரில் மட்டும்) 1.6 கோடி வாடிக்கையாளர்கள் சேர்த்து ரிலையன்ஸ் ஜியோ உலக சாதனை புரிந்துள்ளது.

விளையாட்டு

1.சீனாவில் நடைபெற்ற சீன ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் பிரிட்டனின் ஆன்டி முர்ரேவும், மகளிர் ஒற்றையர் பிரிவில் போலந்தின் அக்னீஸ்கா ரத்வன்ஸ்காவும் சாம்பியன் பட்டம் வென்றுள்ளனர்.இறுதிச்சுற்றில் ஆன்டி முர்ரே 6-4, 7-6 (2) என்ற நேர் செட்களில் பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.இதன்மூலம் ஆன்டி முர்ரே சீன ஓபனில் முதல் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.ஆன்டி முர்ரே வென்ற 40-ஆவது சாம்பியன் பட்டம் இதுவாகும்.
2.ரஷியாவின் விளாதிவோஸ்டாக் நகரில் நடைபெற்ற ரஷிய ஓபன் கிராண்ட்ப்ரீ பாட்மிண்டன் போட்டியில் மகளிர் ஒற்றையர் இறுதிச்சுற்றில் இந்தியாவின் ருத்விகா ஷிவானி 21-10, 21-13 என்ற நேர் செட்களில் ரஷியாவின் ஈவ்ஜெனியாவை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.கலப்பு இரட்டையர் இறுதிச்சுற்றில் இந்தியாவின் சிக்கி ரெட்டி-பிரணவ் சோப்ரா ஜோடி 21-17, 21-19 என்ற நேர் செட்களில் ரஷியாவின் விளாதிமிர் இவானோவ்-வலேரியா சோரோகினாவை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது.

தினம் ஒரு மாவட்டம் சிறப்பு செய்திகள்

16.இன்று திருச்சிராப்பள்ளி மாவட்டம்.

தென்னகத்தின் மத்தியில் திருச்சி மாவட்டம் அமைந்துள்ள காரணத்தால், தென்னகத்தின் மீது படையெடுத்து வெற்றி கொண்ட அத்தனைப் பேரரசுகளின் ஆதிக்கத்திலும் பரந்தும் குறுகியும் இம்மாவட்டம் விளங்கியது. சேர, சோழ, பாண்டியர்களாலும், விஜய நகரப் பேரரசாலும் பாளையக்காரர்களாலும் திருச்சி மாவட்டம் ஆளப்பட்டது. ஆங்கிலேயர்களின் நிலையான ஆட்சி அமைந்த பிறகே, இம்மாவட்டத்தில் அமைதியும் வளர்ச்சியும் ஏற்படத் தொடங்கின. 1948-இல் புதுக்கோட்டை சமஸ்தானம் திருச்சி மாவட்டத்தில் இருந்தது. இப்பகுதி 1974-இல் திருச்சியிலிருந்து பிரிக்கப்பட்டு தனி மாவட்டமாக அமைந்தது. நில அடிப்படையில் தமிழகத்தின் மையமாக விளங்கும் திருச்சி மாவட்டம் 1995, செப்டம்பர் 30-ஆம் தேதி திருச்சி, கரூர், பெரம்பலூர் என மூன்று மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டது.
வடக்கில் பெரம்பலூர் , சேலம் மாவட்டங்களையும், கிழக்கில் அரியலூர், தஞ்சாவூர் மாவட்டங்களையும், தெற்கில் புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் மதுரை மாவட்டங்களையும், வட மேற்கில் நாமக்கல் மாவட்டத்தையும், மேற்கில் கரூர், திண்டுக்கல் மாவட்டங்களையும் திருச்சிராப்பள்ளி மாவட்டம் எல்லைகளாகக் கொண்டுள்ளது.
உலகின் மிகவும் பழமையான அணையாக கருதப்படும் கல்லணை திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில்தான் அமைந்திருக்கிறது.கல்லணையிலிருந்து கொள்ளிடம்,காவிரி,வெண்ணாறு, புது ஆறு என்ற நான்கு ஆறுகள் பிரிந்து செல்கின்றன.முக்கொம்பு திருச்சியில் உள்ள சுற்றுலா தலங்களில் ஒன்றாகும் இது திருச்சியில் இருந்து 18 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து உள்ளது இது மேலனை எனவும் அலைக்கப்படுகிறது இது காவேரி கறையில் அமைந்துள்ளது.