இந்தியா

1.கோக – கோலா இந்தியா மற்றும் தென்மேற்கு ஆசியாவின் தலைவராக தமிழகத்தை சேர்ந்த திருமலை கிருஷ்ணகுமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
2.மாவோயிஸ்டுகளால் பாதிக்கப்பட்ட 10 மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் 35 மாவட்டங்களின் ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர் , துணை ராணுவப்படை மற்றும் உளவு அமைப்பின் தலைவர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் ( டெல்லியில் ) மாவோயிஸ்டுகளை ஒடுக்க சமாதான் திட்டம் (Samadhan approach) செயல்படுத்தப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இதன் விரிவாக்கம்
S – Smart leadership ( திறமையான தலைமை )
A – Aggressive strategy ( ஆக்ரோஷமான திட்டங்கள் )
M – Motivation ( ஊக்கம் )
A – Actionable intelligence ( சிறந்த உளவு தகவல்கள் )
D – Dashboard-based key performance indicators and key result areas ( நடவடிக்கை மற்றும் அதன் பலன்கள் உடனுக்குடன் தெரியும் வகையிலான தகவல் பரிமாற்றம் )
H – Harnessing technology ( தொழில்நுட்ப பயன்பாடு )
A – Action plan ( செயல் திட்டம் )
N – No access to funds ( நிதி வருவதை தடுப்பது )
3.ஏழு பொதுத்துறை வங்கிகளுக்கு நிர்வாக இயக்குநர்களை மத்திய அரசு நியமித்துள்ளது.அலகாபாத் வங்கியின் நிர்வாக இயக்குனராக ( கொல்கத்தா) – உஷா அனந்தசுப்ரமணியன்,சிண்டிகேட் வங்கியின் நிர்வாக இயக்குனராக – மெல்வின் ரெகோ,யூனியன் பேங்க் ஆப் இந்தியாவின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக – ராஜ்கிரண் ராஜ்,இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் நிர்வாக இயக்குனராக – ஆர்.சுப்ரமணியகுமார்,பேங்க் ஆப் இந்தியாவின் நிர்வாக இயக்குனராக – தீனபந்து மொஹாபத்ரா,விஜயா வங்கியின் செயல் இயக்குனராக – ஆர்.ஏ.சங்கர நாராயணன்,பஞ்சாப் நேஷனல் வங்கியின் நிர்வாக இயக்குனராக – சுனில் மேத்தா ஆகியோர் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
4.நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி கர்ணனுக்கு ஆறுமாத சிறைத்தண்டனை விதித்து உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது.


விளையாட்டு

1.பிரேசிலின் சாவோ பாலோ நகரில் நடைபெற்ற பிரேசில் ஓபன் டேபிள் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில், இந்தியாவின் அமல்ராஜ், பிரேசிலின் கால்டிரானோ ஹியூகோவிடம் 0–5 (12–14, 9–11, 7–11, 7–11, 5–11) என்ற கணக்கில் தோல்வி அடைந்தார்.


இன்றைய தினம்

1.இன்று உலக வலசை போதல் தினம் (World Migratory Bird Day).
பறவைகள் தங்களின் வாழ்விடத்திலிருந்து ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட காரணங்களுக்காக வலசை போகின்றன. வலசை போகும் பறவைகள் பூமியின் காந்த விசையில் ஏற்படும் மாற்றத்தை உணர்ந்து தாங்கள் சேருமிடத்தைக் கண்டறிகின்றன. வலசை போகும் பறவைகளைப் பாதுகாப்பது, அதன் இருப்பிடத்தைப் பாதுகாத்தல் போன்ற விழிப்புணர்வை ஏற்படுத்த 2006ஆம் ஆண்டிலிருந்து இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
2.அன்னையர் நாள் முதன் முதலில் அமெரிக்காவில் மேற்கு வேர்ஜினியாவில் கொண்டாடப்பட்ட நாள் 10 மே 1908.
3.ஜவகர்லால் நேரு இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் தலைவரான நாள் 10 மே 1946.

 

– தென்னகம்.காம் செய்தி குழு