தமிழகம்

1.முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவையடுத்து,காலியாக உள்ள ஆர்.கே.நகர் தொகுதிக்கு ஏப்ரல் 12-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.இதற்கான வேட்புமனு தாக்கல், வரும் 16-ம் தேதி தொடங்கும் எனவும் அறிவித்துள்ளது.
2.சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குகளை தாக்கல் செய்வதற்கான கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.இந்த கட்டண உயர்வு மார்ச் 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.


இந்தியா

1.நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) தனது ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்றக் கூடிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
2.ஜம்மு-காஷ்மீரில் அமைக்கப்பட்டுள்ள நாட்டிலேயே மிக நீளமான 9.2. கி.மீ. தூர சுரங்கப்பாதையை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார்.தற்போது பணிகள் நிறைவடைந்து திறப்பு விழாவுக்கு தயாராக உள்ளது.காஷ்மீர் மாநிலத்தில் ஜம்முவையும், காஷ்மீரையும் இணைக்கும் வகையில் செனானி மற்றும் நஷ்ரி இடையே இந்த சுரங்கப்பாதை உருவாக்கப்பட்டுள்ளது.
3.இந்திய பெரும் கோடீஸ்வரர்கள் பட்டியலில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி முதலிடத்தில் தொடர்ந்து நீடிக்கிறார்.அசோக் லேலண்டு குழுமத்தின் எஸ்.பி. இந்துஜா மற்றும் குடும்பத்தினர் இரண்டாவது இடத்தையும்,சன் பார்மா நிறுவன தலைவர் திலீப் சாங்வி மூன்றாவது இடத்தையும்,பலோன்ஜி மிஸ்திரி நான்காவது இடத்தையும் பிடித்துள்ளனர். இந்த பட்டியலை ஹூரன் ரிப்போர்ட் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ளது.


உலகம்

1.ஸ்டேன்ஃபோர்டு பல்கலைக்கழத்தில் கல்வி பயின்று கொண்டிருக்கும் பிரிட்டனை சேர்ந்த ஜோசுவா ப்ரௌடர், “டுநாட்பே” என்ற உலகின் முதலாவது எந்திர வழக்கறிஞர் செயலியை வடிவமைத்துள்ளார்.அமெரிக்காவிலும், கனடாவிலும் இந்த செயலி குடிவரவு தொடர்பான காரியங்கள் அனைத்திற்கும் அகதிகளுக்கு உதவி வருகிறது.


சிறப்பு செய்திகள்

Mobile World Congress – 2017 நடைபெற்ற இடங்கள்
பார்சிலோனா – பிப்ரவரி 27 முதல் மார்ச் 02 / 2017 வரை.
Mobile World Congress – 2017 நடைபெற இருக்கும் இடங்கள்
ஷாங்காய் – ஜூன் 28 முதல் ஜூலை 01 / 2017 வரை.
புதுடில்லி – செப்டம்பர் 27 / 2017.


இன்றைய தினம்

1.பிரித்தானியாவில் முதலாவது மக்கள் தொகைக் கணக்கெடுப்பு இடம்பெற்ற நாள் 10 மார்ச் 1801.
2.அலெக்சாண்டர் கிரகாம் பெல் உலகின் முதல் தொலைபேசி அழைப்பை மேற்கொண்ட நாள் 10 மார்ச் 1876.
3.கிளர்ச்சியைத் தூண்டினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் மகாத்மா காந்தி ஆறாண்டு கால சிறைத்தண்டனை பெற்றார். ஆனாலும் இரண்டாண்டுகளில் சுகவீனம் காரணமாக விடுதலையான நாள் 10 மார்ச் 1922.
4.இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி ஆரம்பிக்கப்பட்ட நாள் 10 மார்ச் 1948.

 

– தென்னகம்.காம் செய்தி குழு