தமிழகம்

1.கடந்த ஆண்டு இடைக்கால பணி நீக்கம் செய்யப்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஞானதேசிகன் மற்றும் அதுல் ஆனந்துக்கு மீண்டும் பணி வழங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
2.வர்தா புயலால் மூடப்பட்டிருந்த வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா பொது மக்கள் பார்வைக்கு இன்று முதல் மீண்டும் திறக்கப்படுகிறது.
3.சென்னையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது குறித்து ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ராஜேஷ்வரன் நேற்று விசாரணையை தொடங்கினார்.
4.இரண்டு வருடங்களுக்கு பிறகு இன்று மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. மதுரை மாவட்டம் பாலமேட்டில் நேற்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.


இந்தியா

1.இன்று தேசிய குடல் புழு நீக்க தினத்தையொட்டி நாடு முழுவதும் ஒரே நாளில் 34 கோடி சிறுவர் – சிறுமியருக்கு குடல் புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது.
2.தேசிய நெடுஞ்சாலைகளின் போக்குவரத்து தொடர்பான தகவல்களை வானொலி மூலம் உடனுக்குடன் ஒலிபரப்பும் வகையிலான சேவை விரைவில் தொடங்கப்பட உள்ளதாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ளார்.
3.பெண்ணதிகாரம் குறித்து விவாதிப்பதற்கான “தேசிய மகளிர் நாடாளுமன்றம்” என்ற 3 நாள் கருத்தரங்கை பிரதமர் நரேந்திர மோடி ஆந்திரப் பிரதேசத்தின் அமராவதியில் இன்று தொடங்கி வைத்தார்.
4.வழக்கற்றுப்போன 150 ஆண்டுகால பழைமையான சட்டம் உள்பட தேவையில்லாத 105 சட்டங்களை நீக்குவதற்கு வகை செய்யும் மசோதா மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.


உலகம்

1.அமெரிக்காவின் வாஷிங்டனில் அதிபர் டிரம்ப் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில்  கணினி வன்பொருள் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த இன்டெல் நிறுவனம் அமெரிக்காவின் அரிஸோனா மாகாணத்தில் ரூ.46,000 கோடியில் புதிய சிப் தயாரிப்பு ஆலையை தொடங்க உள்ளதாகத் தெரிவித்துள்ளது.இன்டெல் நிறுவன தலைமை நிர்வாகி பிரையன் கிர்ஸானிச் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
2.சிரியாவில் அமெரிக்க போர் விமானங்கள் நிகழ்த்திய தாக்குதலில் அல்-காய்தா பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த மூத்த தளபதி அபு ஹனி அல்-மாஸ்ரி கொல்லப்பட்டதாக அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சகமான பென்டகன் தெரிவித்துள்ளது.
3.இனிமேல் சீனாவிற்கு பயணம் செய்ய விரும்பும் வெளிநாட்டினர் அந்நாட்டிற்குள் நுழைவதற்குள் விமான நிலையத்தில் தங்களது கைரேகைகளை பதிவு செய்ய வேண்டுமென்று அந்நாட்டின் பொது பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.இந்த நடைமுறையானது முதன்முறையாக இன்று முதல் ஷென்ஸென் விமான நிலையத்தில் அமல் செய்யப்பட உள்ளது.


விளையாட்டு

1.சர்வதேச கால்பந்து தரவரிசையில் இந்திய அணி 130-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.ஆர்ஜென்டீனா முதலிடத்திலும், பிரேசில் இரண்டாவது இடத்திலும்,ஜெர்மனி மூன்றாவது இடத்திலும்,சிலி நான்காவது  இடத்திலும்,பெல்ஜியம் ஐந்தாவது இடத்தையும் பிடித்துள்ளன.ஆசிய கால்பந்து தரவரிசையில் இந்தியா 20-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.முதல் இடத்தை ஈரான் பிடித்துள்ளது.


இன்றைய தினம்

1.புதுதில்லி இந்தியாவின் தலைநகரமாக்கப்பட்ட நாள் 10 பிப்ரவரி 1931.
2.தமிழகத்தின் முதல்வராக கருணாநிதி முதன்முதலாக பதவியேற்றுக் கொண்ட நாள் 10 பிப்ரவரி 1969.
3.அலன்சன் கிரென் தீயணைக்கும் கருவியின் காப்புரிமம் பெற்ற நாள் 10 பிப்ரவரி 1863.
4.சதுரங்கக் கணினி ‘டீப் புளூ’ உலக முதற்தரவீரர் காரி காஸ்பரோவை வென்ற நாள் 10 பிப்ரவரி 1996.
5.தகவல் தொடர்பு செயற்கைக்கோள்கள் இரிடியம் 33, காசுமசு-2251 ஆகியன விண்வெளியில் மோதி அழிந்த நாள் 10 பிப்ரவரி 2009.

 

– தென்னகம்.காம் செய்தி குழு