current-affairs

இந்தியா

1.மக்களிளிடையே நிலவும் சில்லரை தட்டுப்பாடு பிரச்சனையை தீர்ப்பதற்கு வசதியாக நாளை முதல் அனைத்து ஏ.டி.எம்., களில் 50 ரூபாய் நோட்டுகள் கிடைக்கும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
2.புதிய வண்ணத்தில் புதிய 1000 ரூபாய் நோட்டுகள் சில மாதங்களிலேயே புழக்கத்திற்கு வரும் என நிதித்துறை செயலாளர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
3.மூன்று நாள் அரசுமுறை பயணமாக பிரதமர் நரேந்திர மோடி ஜப்பானுக்கு இன்று புறப்பட்டுச் செல்கிறார்.
4.நாட்டிலேயே முதல் முறையாக திரவ இயற்கை எரிவாயுவை (எல்என்ஜி) எரிபொருளாகக் கொண்டு இயங்கும் பேருந்து சேவை கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானும், கேரள முதல்வர் பினராயி விஜயனும் கூட்டாகக் கொடியசைத்து பேருந்து சேவையை அறிமுகப்படுத்தினர்.
5.சரக்கு – சேவை வரிக்கான (ஜிஎஸ்டி) அதிகாரப்பூர்வ இணையதளச் சேவை கடந்த நவம்பர் 8ம் தேதி முதல்  பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

உலகம்

1.தென் கொரிய அதிபர் எதிர்க்கட்சிகள் நியமிப்பவரையே பிரதமராக அறிவிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.
2.அமெரிக்க அதிபர் தேர்தலில் இல்லினோயிஸ் மாகாணத்தின் செனட் உறுப்பினர் தேர்தலில் ராஜா கிருஷ்ணமூர்த்தி என்ற தமிழர் வெற்றி பெற்றுள்ளார்.
3.இன்று உலக அறிவியல் தினம் (World Science Day).
உலக அறிவியல் தினம் 1994ஆம் ஆண்டு நவம்பர் 10 அன்று முதன்முதலாக கொண்டாடப்பட்டது. இத்தினம் உலக அமைதி மற்றும் வளர்ச்சிக்காகவே கொண்டாடப்படுகிறது. அறிவியல் மக்களுக்கே, அறிவியல் நாட்டிற்கே என்கிற விழிப்புணர்வை ஏற்படுத்தவே இத்தினம் கொண்டாடப்படுகிறது. சிறந்த ஆய்வுகளில் ஈடுபடும் இளம் விஞ்ஞானிகளுக்கு யுனெஸ்கோ விருதுகள் வழங்கி இத்தினத்தில் கௌரவிக்கிறது.