தமிழகம்

1.நீர்வளத் துறை வல்லுநரும், அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தருமான குழந்தைசாமி(87), காலமானார்.


இந்தியா

1.ரொக்கமில்லா மின்னணு பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் நோக்கத்தில் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, செல்லிடப்பேசி செயலிகள், மின் பணப்பை (இ-வாலட்) போன்ற மின்னணு பரிவர்த்தனைகளுக்கு 11 புதிய சலுகைகளை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி அறிவித்துள்ளார்.
2.சென்னை, தில்லி, மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத், பெங்களூரு  ஆகிய விமான நிலையங்களில் டிசம்பர் 15-ஆம் தேதி முதல்  பயணிகள் கொண்டு செல்லும் சூட்கேஸ் உள்ளிட்ட உடைமைகளின் சோதனை நடைமுறைகளை சற்று எளிதாக்க மத்திய தொழிலக பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எஃப்) முடிவு செய்துள்ளது.
3.சினிமா தியேட்டர்களில் தேசிய கீதம் ஒலிபரப்பப்படும்போது மாற்றுத்திறனாளிகள் எழுந்து நிற்க தேவையில்லை என சுப்ரீம் கோர்ட்டு தனது உத்தரவில் திருத்தம் செய்துள்ளது.
4.காவிரி விவகாரத்தில் நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பு தொடர்பாக கர்நாடகம், தமிழகம், கேரளம் ஆகிய மாநில அரசுகள் தாக்கல் செய்துள்ள மனுக்களை விசாரிக்க தனக்கு அதிகாரம் உண்டு என்று உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது.
5.நெகிழி (பிளாஸ்டிக்) ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க திட்டமிட்டுள்ளதாகவும் அதற்கான மூலப் பொருள்களை கொள்முதல் செய்வதைத் தொடங்கி விட்டதாகவும் மத்திய அரசு  நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.
6.கேரளத்தில் ஊழல் குறித்த தகவல்களை அந்த மாநில அரசிடம் பொதுமக்கள் தெரிவிப்பதற்கு வசதியாக செல்லிடப்பேசியில் செயல்படக்கூடிய “அ ரைஸிங் கேரளா’, “விசில் நவ்’ என்ற பெயரிலான 2 செயலிகளையும் அந்த மாநில முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்டுள்ளார்.
7.மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு தமிழிலும் எழுதலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.


உலகம்

1.அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் சீனாவுக்கான புதிய தூதரக டெரி பிரான்ஸ்டாட் (70) , பெயரை அறிவித்துள்ளார்.
2.அமெரிக்காவில் ஆளில்லா விமானம் மூலம் மனித ரத்தம் வினியோகம் செய்யப்பட்டுள்ளது.இந்த விமானங்கள் ரிமோட்கண்ட்ரோல் மூலம் இயக்கப்படுகிறது.இதில் ஜான்ஸ் ஹோப் கின்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் குழு ஈடுபட்டனர்.


வர்த்தகம்

1.நடப்பு ஆண்டில் பேடிஎம் மூலமாக 200 கோடி பணப்பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்படும் என்று அந்த நிறுவனத்தின் நிறுவனரும், தலைமைச் செயல் அதிகாரியுமான விஜய் சேகர் சர்மா தெரிவித்துள்ளார்.


முக்கிய தினங்கள்/வாரங்கள்

1.இன்று நோபல் பரிசு விழா நாள் (Nobel Prize Ceremony).
உலகளவில் பெரிதும் மதிக்கப்படும் பரிசு நோபல் பரிசாகும். இயற்பியல், வேதியியல், இலக்கியம், மருத்துவம், அமைதி, பொருளாதாரம் ஆகிய துறைகளில் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. சுவீடன் நாட்டு விஞ்ஞானி ஆல்பிரட் நோபல் அவர்களால் 1895இல் ஆரம்பிக்கப்பட்டு 1901ஆம் ஆண்டிலிருந்து வழங்கப்படுகிறது. நோபல் நினைவு நாளான டிசம்பர் 10 இல் நோபல் பரிசு விழா நடக்கிறது.
2.சர்வதேச விலங்குகள் உரிமைகள் தினம் (International Animal Rights Day).
மனித உரிமைகளுக்காக போராடுவதற்காக மனிதர்கள் இருக்கின்றனர். ஆனால் விலங்குகளின் உரிமைக்காக விலங்குகள் போராட முடியாது. விலங்குகளின் நலன் காக்க அவைகளின் உரிமைக்காக மனிதர்கள்தான் போராட வேண்டும். ஆண்டுதோறும் கோடிக்கான ஆடு, மாடு, கோழி, பன்றி, மீன் என உயிர்கள் கொல்லப்படுகின்றன. விலங்குகளின் நலன் கருதி இத்தினம் டிசம்பர் 10 அன்று கடைபிடிக்கப்படுகிறது.
3.உலக மனித உரிமைகள் தினம் (World Human Rights Day).
ஐ.நா. பொதுச்சபை 1948ஆம் ஆண்டு டிசம்பர் 10ஆம் நாள் அனைத்துலக மனித உரிமைகள் என்கிற பிரகடனத்தை வெளியிட்டது. சாதி, மதம், இனம், பால், நிறம், மொழி, நாடு என்கிற பாகுபாடுகாட்டி வேறுபடுத்தக் கூடாது. தனி மனிதன் சுதந்திரமாகவும், கௌரவமாகவும் தலை நிமிர்ந்து வாழ்வதற்கு வகை செய்வதே மனித உரிமையாகும். இத்தினம் 1950ஆம் ஆண்டுமுதல் கொண்டாடப்படுகிறது.
4.இன்று சுதந்திர இந்தியாவின் முதலாவது ஆளுநரும், இந்திய விடுதலை போராட்ட வீரருமான ராஜாஜி பிறந்தநாள்.இவர் பிறந்த தேதி 10 டிசம்பர் 1878.
5.எகிப்தில் நைல் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட அஸ்வான் அணை திறக்கப்பட்ட நாள் 10 டிசம்பர் 1902.
6.தாஸ்மேனியாவில் பெண்களுக்கு வாக்குரிமை வழக்கப்பட்ட நாள் 10 டிசம்பர் 1902.
7.உலகின் முதலாவது சமிக்கை விளக்குகள் லண்டனில் நாடாளுமன்றுக்கு வெளியே நிறுவப்பட்ட நாள் 10 டிசம்பர் 1868.