இந்தியா

1.பிரபல பாடகி வைக்கம் விஜயலட்சுமியை கவுரவிக்கும் விதமாக அமெரிக்காவைச் சேர்ந்த உலக தமிழ் பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டத்தை அவருக்கு வழங்கி உள்ளது.


உலகம்

1.சிக்கிம் எல்லையில் இந்தியா – பூடான் – சீனா ஆகிய 3 நாடுகள் சந்திக்கும் முச்சந்திப்பு அருகே பீடபூமி பகுதி ஒன்று உள்ளது. இதை டோகாலா என இந்தியாவும், டோகாலாம் என பூடானும், டோங்லாங் என சீனாவும் அழைத்து வருகின்றன. சமீபத்திய பிரச்சனைகளுக்கு காரணமான பகுதி இதுவாகும்.
2.அட்லாண்டின் கடலில் உள்ள மேற்கு ஆப்பிரிக்க தீவு நாடான கானா, முதன் முறையாக செயற்கை கோளை வெற்றிகரமாக விண்ணுக்கு அனுப்பியுள்ளது. அதன் பெயர் கானாசாட்-1. இதை கொபோரிடுயாவில் உள்ள சர்வதேச நாடுகள் பல்கலைக் கழக மாணவர்கள் தயாரித்துள்ளனர்.
3.இங்கிலாந்தின் மான்செஸ்டர் மற்றும் சீனாவின் மத்திய தெற்கு பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இணைந்து, மணிக்கு 6ஆயிரத்து 200 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் பயணிகள் விமானத்தை உருவாக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் வெற்றியடைந்துள்ளனர்.இந்த விமானத்திற்கு “ஹைபர்சோனிக் விமானம்” எனவும் பெயரிட்டுள்ளனர்.நாசாவின் நிதியுதவியுடன் இந்த விமானம் தயாரிக்கப்பட்டுள்ளது.


விளையாட்டு

1.ஒடிசா தலைநகர் புவனேஸ்வரத்தில் நடைபெறும் 22வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் குண்டு எறிதலில் இந்திய வீராங்கனை மன்பிரீத் கவுர் 18.28 மீட்டர் தூரம் குண்டு எறிந்து இந்தியாவுக்கு முதல் தங்கப்பதக்கத்தை பெற்று தந்துள்ளார்.


இன்றைய தினம்

1.988 – டப்ளின் நகரம் அமைக்கப்பட்டது.
2.1796 – ஒவ்வொரு நேர் முழு எண்ணும் அதிகபட்சம் மூன்று முக்கோண எண்களின் கூட்டுத்தொகையாகக் கொடுக்கலாம் என்பதை கார்ல் ஃப்ரெடெரிக் காஸ் கண்டுபிடித்தார்.
3.1890 – வயோமிங் ஐக்கிய அமெரிக்காவின் 44வது மாநிலமாக சேர்க்கப்பட்டது.
4.1909 – ஜெர்மனியின் எம்டன் நாசகாரிக் கப்பல் சேவைக்கு விடப்பட்டது.
5.1962 – உலகின் முதல் தொலைத் தொடர்பு விண்கலமான டெல்ஸ்டார் விண்ணில் ஏவப்பட்டது.

 

– தென்னகம்.காம் செய்தி குழு