current-affairs

இந்தியா

1.ஜூன் மாதம் 22-ஆம் தேதி, மீனவர்கள் 7 பேர் சென்ற படகு மூழ்கியது. அந்த நேரத்தில், பலத்த மழையும், சூறாவளிக் காற்றும் வீசிக் கொண்டிருந்தது. எனினும், கடலுக்குள் தத்தளித்துக் கொண்டிருந்த மீனவர்களைக் கண்ட ராதிகா மேனன், அவர்களை மீட்க உடனடியாக உத்தரவிட்டார்.இதனால் ஐ.நா. சபையின் வீரதீர விருது வழங்கப்படவுள்ளது. இந்த விருதை பெறும் முதல் இந்திய பெண் ராதிகா என்பது குறிப்பிடத்தக்கது.லண்டனில் வரும் 21ம் தேதி இந்த விருது வழங்கப்படவுள்ளது
2.இந்தியாவின் முதல் திருநங்கைகள் நடனக்குழுவான ரவீனா, ஆஷா, ஃபீடா, கோமல், சாந்தினி, பாவிகா என 6 திருநங்கைகள் அடங்கிய குழுவுக்கு சிறந்த கிரியேட்டிவிட்டிக்கான கென்னஸ் லயன்ஸ் சர்வதேச விருதை வென்றுள்ளது.
3.60 வயதுக்கு மேற்பட்ட திருநங்கைகளுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என கேரளா மாநில பட்ஜெட்டில் நிதியமைச்சர் டிஎம் தாமல் இஸாக் அறிவித்தார்.
4.10 ஜூலை 2006-ம் ஆண்டு இந்தியாவில் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்சாட்-4 செயற்கைக் கோளை ஏற்றிச் சென்ற ஜி.எஸ்.எல்.வி. விண்கலம் இயந்திரக் கோளாறினால் கடலில் விழுந்தது.

உலகம்

1.சோவியத் ஒன்றியத்தின் செய்தி நிறுவனம் டாஸ் ஆரம்பிக்கப்பட்ட நாள் 10 ஜூலை 1925.
2.உலகின் முதல் தொலைத் தொடர்பு விண்கலமான டெல்ஸ்டார் விண்ணில் ஏவப்பட்ட நாள் 10 ஜூலை 1962.
3.வங்காள தேசத்தை அங்கீகரிக்கும் தீர்மானம் பாகிஸ்தான் சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட நாள் 10 ஜூலை 1973.
4. இன்று பஹாமாஸ் நாடு  விடுதலை அடைந்த நாள். விடுதலை அடைந்த தேதி 10 ஜூலை 1973.
5.தென்னாபிரிக்கத் கிரிக்கெட்  அணி சர்வதேச கிரிக்கெட் வாரியத்தில் மீண்டும் சேர்க்கப்பட்ட நாள் 10 ஜூலை 1991.