இந்தியா

1.Wildlife Trust of India (WTI) வின் நல்லெண்ண தூதராக பாலிவுட் நடிகை தியா மிர்ஸா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
2.பதிப்புரிமை பதிவாளராக Hoshiar Singh ஐ மத்திய அரசு நியமனம் செய்துள்ளது. இவரது பதவிக்காலம் 5 ஆண்டுகளாகும்.


உலகம்

1.யூனிசெப் அமைப்பின் Super Dads பிரச்சார தூதுவராக சச்சின் டெண்டுல்கர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.வளரும் பருவத்தில் உள்ள குழந்தைகளின் வளர்ச்சியில் தந்தைகளின் பங்களிப்பை / கடமைகளை உணர்த்துவதே இந்த பிரச்சாரத்தின் நோக்கம் ஆகும்.
2.உலகின் முதன்மை பல்கலைக்கழகங்கள் பட்டியலில் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் முதன் முறையாக இடம் பிடித்து உள்ளது.க்யூ.எஸ். வேர்ல்டு யுனிவர்சிட்டி ரேங்கிங் என்ற இங்கிலாந்து நிறுவனம் இந்த பட்டியலை வெளியிட்டுள்ளது.
3.அமெரிக்காவில் உள்ள மசெசூட்ஸ் லிங்கன் ஆய்வகம் நடத்தும் இண்டர்நேஷ்னல் சயின்ஸ் அண்ட் என் ஜினியரிங் ஃபேர் எனப்படும் போட்டி பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்பட்டது.இதில் பெங்களூரை சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவி சாஹிதி பிங்கலி நீர்நிலைகளின் சுத்தத்தைக் கண்காணிக்க உதவும் மொபைல் அப்ளிகேஷன் குறித்த ஒரு புதுமையான அணுகுமுறைக்காக அவருக்கு தங்க பதக்கம் வழங்கப்பட்டது.
சாஹிதி பிங்கலியின் பெயர் புதிய கிரகம் ஒன்றுக்கு சூட்டப்படும் என்று செசூட்ஸ் லிங்கன் ஆய்வகம் அறிவித்துள்ளது.


இன்றைய தினம்

1.இன்று போர்த்துக்கல்லில் தேசிய நாள் கொண்டாடப்படுகிறது.

 

– தென்னகம்.காம் செய்தி குழு