தமிழகம்

1.நிகழாண்டுக்கான அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பிரிவில் ஆஸ்கர் விருதுக்கு கோவையைச் சேர்ந்த பொறியாளர் கிரண் பட் (41) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.அமெரிக்காவின்  கலிபோர்னியா மாநிலத்தில் பிப்ரவரி மாதம் 11-ஆம் தேதி நடைபெறும் விழாவில் இவருக்கு இந்த விருது வழங்கப்பட உள்ளது.
2.கேரள மாநிலத்தின் உயரிய விருதான “ஹரிவராசனம் விருது’க்கு, இசையமைப்பாளரும், பாடகருமான கங்கை அமரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.வரும் 14-ஆம் தேதி  சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடைபெறவுள்ள விழாவில், கங்கை அமரனுக்கு மாநில சுற்றுலா – அறநிலையத் துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் இவ்விருதை வழங்கவுள்ளதாக கேரள அரசு நேற்று அறிவித்துள்ளது.
3.எழுத்தாளர் மாலனுக்கு “ஆய்வுக் கொடையை” (“ஃபெலோஷிப்”) சிங்கப்பூர் தேசிய நூலகம் வழங்கியுள்ளது.மேலும் “லீ காங் சியான் ஆய்வறிஞர்” என்ற சிறப்புக் கௌரவத்தையும் இவருக்கு வழங்கியுள்ளது.


இந்தியா

1.மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின்கீழ் பணியாற்றுவோருக்கு வரும் ஏப்ரல் மாதம் முதல் ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
2.ஜனவரி 02 முதல் ஜனவரி 12 வரை ஒடிஷாவின் Bargarh நகரில் , மிகவும் பிரசித்தி பெற்ற, திறந்தவெளி நாடக திருவிழாவான ( கிருஷ்ண லீலா மற்றும் மதுரா விஜயம் ) Reign of King Kansa நடைபெறுகிறது.
3.நாடு முழுவதும் பொங்கலுக்கு கட்டாய பொதுவிடுமுறை அல்ல என மத்திய அரசு நேற்று அறிவித்துள்ளது.மேலும் பொங்கல் திருநாளை கொண்டாடுபவர்கள் மட்டும் விடுப்பு எடுத்து கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளது.
4.மாநில மின் பகிர்மான நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குவதை தடுக்க மத்திய அரசு கொண்டு வந்துள்ள ‘உதய்’ மின் திட்டத்தில் ஜனவரி 09-ம் தேதி தமிழக அரசு இணைந்துள்ளது. மத்திய அரசு சார்பாக மத்திய மின்துறை அமைச்சர் பியூஸ் கோயலும், தமிழக அரசு சார்பாக மாநில மின்துறை அமைச்சர் தங்கமணியும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.முதலாமாண்டில் மின் பகிர்மான நிறுவனத்திற்கான கடனில் 75% மாநில அரசு ஏற்கும். இரண்டாமாண்டு அது 50% ஆகவும், முன்றாம் ஆண்டில் அது 25% ஆகவுமிருக்கும்.மேலும் இந்த மின் திட்டத்தில் 21-வது மாநிலமாக தமிழகம் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
5.குஜராத் மாநிலம் காந்திநகரில் காந்திநகரின் கிஃப்ட் சிட்டி (குஜராத் இண்டர்நேஷனல் ஃபைனான்ஸ் டெக்-சிட்டி) பகுதியில் “இந்தியா-ஐஎன்எக்ஸ்’ என்ற பெயரில் சர்வதேச சந்தையை பிரதமர் நரேந்திர மோடி நேற்று  தொடக்கி வைத்தார்.
6.ரொக்கமற்ற பணப் பரிவர்த்தனைக்கான “பீம்’ செயலி அறிமுகப்படுத்தப்பட்ட 10 நாள்களில் ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் அதைப் பதிவிறக்கம் செய்துள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.


உலகம்

1.மேற்கு ஆப்பிரிக்க நாடான கானாவில் புதிய அதிபராக அகுஃபோ அட்டோ கடந்த ஜனவரி 7-ம் தேதி பதவியேற் றுக்கொண்டார்.
2.ஈரான் நாட்டின் முன்னாள் அதிபர் அக்பர் ஹஷேமி ரஃப்சஞ்சானி (82),கடந்த ஜனவரி 8-ம் தேதி காலமானார்.இவர் ஈரானில் 1989 முதல் 1997-ஆம் ஆண்டு வரை அதிபராக இருந்தார்.


விளையாட்டு

1.போர்ச்சுக்கல் கால்பந்தாட்ட வீரர் ரொனால்டோ 2016-ம் ஆண்டு சிறந்த வீரருக்கான பிபா விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.சிறந்த பெண் வீரருகான 2016-ம் ஆண்டு பிபா விருது அமெரிக்காவை சேர்ந்த கார்லி லோய்டு என்பவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.


இன்றைய தினம்

1.இன்று உலக சிரிப்பு தினம் (World Laughter Day).
முதன்முதலாக 1998ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 10ஆம் நாள் மதன் கட்டாரியா என்பவரால் சிரிப்பு தினம் தொடங்கப்பட்டது. அவர் இதை உலக அமைதிக்காக சிரிப்பு யோகாவாகவே அறிமுகப்படுத்தினார். இன்று 65 நாடுகளில் 6000 சிரிப்பு கிளப்புகள் நடந்து வருகின்றன. உடம்பிற்கும், மனதிற்கும் சிரிப்பு நல்லது. இதை வலியுறுத்தியே இத்தினம் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.
2.மிகப் பழமையான சுரங்க ரெயில்பாதை லண்டனில் திறக்கப்பட்ட நாள் 10 ஜனவரி 1863.

 

– தென்னகம்.காம் செய்தி குழு