Current-Affairs-Updates

இந்தியா

1.இந்தியாவிற்கும் கிரீஸ் நாட்டிற்கும் இடையே இதுவரை  நேரடி விமான போக்குவரத்து கிடையாது.இந்த நிலையை மாற்ற இந்தியாவும்,கிரசும் விமான சேவையை துவக்க இரு நாடுகளும் இணைந்து திறந்த வான்வெளி ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன.இந்தியா இது போன்ற திறந்த வான்வெளி ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள முதல் நாடு கிரீஸ் ஆகும்.

உலகம்

1.இன்று உலக தற்கொலை தடுப்பு தினம் (World Suicide Prevention Day).

உலகில் சராசரியாக 40 நொடிக்கு ஒருவர் தற்கொலை செய்து கொள்கிறார். தற்கொலை என்பது ஒரு சர்வதேச பிரச்சினையாக உள்ளது.தற்கொலையை தடுப்பதற்கு உலக தற்கொலை தடுப்பு அமைப்பு 1960ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பும், உலக சுகாதார அமைப்பும் செப்டம்பர் 10 ஐ உலக தற்கொலை தடுப்பு தினமாக அறிவித்தது. இது 2003ஆம் ஆண்டுமுதல் கடைப்பிடிக்கப்படுகிறது.
2.லண்டனை சேர்ந்த சீக்கிய இளம்பெண் ஹர்மான் கவுர் இளம் வயதில் நீண்ட தாடி வளர்த்தற்காக  கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். இவர் விளமபர மாடலாக உள்ளார்.இவரது வயது 24.இவர் ஆறு இன்ச் அளவில் தாடி வளர்த்து சாதனை வரிசையில் இணைந்துள்ளார்.
3.அமெரிக்க விமானப் போக்குவரத்து ஆணையம் வெளியுட்டுள்ள அறிவிப்பில் இனி சாம்சங் கேலக்ஸி நோட் 7 ஸ்மார்ட்போனைப் விமானப் பயணத்தின்போது பயணிகள் பயன்படுத்தக் கூடாது என தெரிவித்துள்ளது.பேட்டரிகள் வெடிப்பதாக எழுந்த புகார்களை தொடர்ந்து  விமானப் போக்குவரத்து ஆணையம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
4.இன்று சீனாவில் ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டது.

விளையாட்டு

1.பிரேசில் நாட்டின் ரியோ நகரில்  நடைபெற்று வரும் மாற்றுத் திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டியில் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேல்  உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.இவர் 1.89 மீட்டர் உயரம் தாண்டி தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார்.இதே பிரிவில் மற்றொரு இந்திய வீரரான வருண் சிங் பாடி வெண்கல பதக்கத்தை கைப்பற்றினார்.இந்த வெற்றியின் மூலம் மாரியப்பன் தங்கவேலுக்கு பரிசுத்தொகையாக தமிழக அரசு ரூ. 2 கோடியை அறிவித்துள்ளது.
2.நியூயார்க்கில் நடைபெற்று வரும் அமெரிக்க ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் அரையிறுதிப் போட்டியில் கரோலினா பிளிஸ்கோவா 6-2 ,7-6 (7-5) என்ற செட் கணக்கில் செரீனா வில்லியம்ஸைத் தோற்கடித்தார்.இதன் மூலம்  186 வாரங்களாக நெ.1 இடத்தை தக்க வைத்துக் கொண்டிருந்த  செரீனா வில்லியம்ஸை பின்னுக்கு  தள்ளி ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பர் முதல் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.