தமிழகம்

1.வாக்காளர்களுக்குப் பணம் பட்டுவாடா செய்த விவகாரத்தால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை, தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது.


இந்தியா

1.“தேர்தல் விவகாரங்களுடன் கூடிய பொருளாதார சீர்திருத்தங்கள்” என்ற கருத்தரங்கு டெல்லியில் ஏப்ரல் 08 மற்றும் ஏப்ரல் 09-ஆம் தேதி நடைபெற்றது.
2.மாநில கவுன்சிலின் 11வது நிலைக்குழு கூட்டம் , உள்துறை அமைச்சர் தலைமையில் நேற்று டெல்லியில் நடைபெற்றது.இதில் மத்திய நிதி அமைச்சர், திரிபுரா , சட்டீஸ்கர், ஒடிஷா & உ.பி முதல்வர்கள் கலந்து கொண்டனர்.இதற்கு முன் இக்கூட்டம் 2005ல் நடைபெற்றது.
3.கொல்கத்தாவில் இருந்து பங்களாதேஷின் குல்னா நகர் இடையே வரும் ஜூலை மாதம் முதல் பயணிகள் ரயில் இயக்கப்பட உள்ளது.இதற்கான சோதனை ஓட்ட ரயில் “பெட்ராபோல்” நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டுள்ளது. இதனை பிரதமர் மோடி மற்றும் பங்களாதேஷ் பிரதமர் ஹசீனா இணைந்து காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்துள்ளனர்.
4.பணியில் இருக்கும் போது தீவிரவாதிகளின் தாக்குதலில் உயிரிழந்த துணை ராணுவப்படை வீரர்களின் குடும்பத்தினருக்கு உதவும் விதமாக “Bharat ke Veer” என்ற இணையதளம் மற்றும் மொபைல் அப்ளிகேஷனை உள்துறை அமைச்சர் மற்றும் ஹிந்தி நடிகர் அக்சய் குமார் இணைந்து அறிமுகப்படுத்தியுள்ளனர்.இதனை தேசிய தகவலியல் மையம் மற்றும் பாரத ஸ்டேட் வங்கி இணைந்து உருவாக்கியுள்ளன.
5.நமது நாட்டில் 13 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளை மன அழுத்தத்தில் இருந்து மீட்டு வெளியே கொண்டுவரும் சீரிய தொண்டில் சென்னையை சேர்ந்த ‘நிம்கேர்’ என்ற தொண்டு நிறுவனம் ஈடுபட்டுள்ளது.இந்த அரிய சேவைக்காக இந்த நிறுவனத்தின் ‘எனது மகிழ்ச்சி திட்டம்’ (“My Happiness project”) என்ற புதிய திட்டத்தை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தொடங்கி வைத்துள்ளார்.


உலகம்

1.ஜெர்மன் விண்வெளி ஆய்வாளர்கள் இணைந்து 149 சக்திவாய்ந்த செனான் மின்விளக்குகளால் உலகின் மிகப்பெரிய சூரியனை உதிக்கவைத்துள்ளனர்.இயற்கையான சூரிய ஒளியை ‘சன்லைட்’ என்று அழைப்பதனால் செயற்கையாக உருவாக்கப்பட்டுள்ள இந்த செயற்கை சூரியனுக்கு ‘சின்லைட்’ என பெயரிட்டுள்ளனர்.
2.லண்டன் நகர நீதிமன்ற நீதிபதியாக இந்திய வம்சாவழியை சேர்ந்த அனுஜா ரவிந்திரா நியமிக்கப்பட்டுள்ளார்.


இன்றைய தினம்

1.டைட்டானிக் பயணிகள் கப்பல் தனது முதலாவதும் கடைசியுமான பயணத்தை இங்கிலாந்தின் சௌதாப்ம்டன் துறையில் ஆரம்பித்த நாள் 10 ஏப்ரல் 1912.
2.முதலாம் மாக்சிமிலியன் மெக்சிக்கோவின் மன்னனாக முடி சூடிய நாள் 10 ஏப்ரல் 1864.
3.கியூபாவில் கியூபா புரட்சிக் கட்சி ஜொசே மார்ட்டீயினால் தொடங்கப்பட்ட நாள் 10 ஏப்ரல் 1869.

 

– தென்னகம்.காம் செய்தி குழு