current3

தமிழகம்

1.கூடங்குளம் முதல் அணு உலையை நாட்டு மக்களுக்கு அர்ப்பணிக்கும் விழா இன்று நடைபெற்றது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்தும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மாஸ்கோவில் இருந்தும், தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தும் காணொலி காட்சி மூலம் பங்கேற்று, நாட்டுக்கு அர்ப்பணித்தனர்.

இந்தியா

1.இந்திய உணவு நிறுவனத்தின் (எஃப்.சி.ஐ) ஆலோசனைக் குழு உறுப்பினராக, சென்னை தி.நகரைச் சேர்ந்த ஹரீஷ் எல்.மேத்தா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு அவர் இந்தப் பொறுப்பில் இருப்பார்.
2.மணிப்பூரில் 16 வருடங்களாக அரசுக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்து வந்த இரோம் ஷர்மிளா (44), தனது உண்ணாவிரத்தை செவ்வாய்க்கிழமை கைவிட்டார்.
3.ஜவஹர்லால் நேரு இந்திய அணுசக்திப் பேரவையைத் (Atomic Energy Commission) துவக்கி வைத்த நாள் 10 ஆகஸ்டு 1948.

உலகம்

1.ஈரான் நாட்டில் சாலைகளில் பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொள்ளும் பொருட்டு ‘போகிமான் கோ’ விளையாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
2.சீனாவில் ஆயிரம் ரோபோட்களை ஒன்றாக நடனமாட வைத்து கின்னஸ் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.சுமார் 1,007 ரோபோட்களை ஒன்றாக நடனமாட வைத்து சாதனை புரிந்துள்ளனர்.
3.உலக மக்கள் தொகை 6 பில்லியனைத் தாண்டிய (www.ibiblio.org தரவின் படி) நாள் 10 ஆகஸ்டு 2000.
4.இன்று எக்குவாடோர்  விடுதலை அடைந்த நாள்.விடுதலை அடைந்த தேதி 10 ஆகஸ்டு 1809.
5.10 ஆகஸ்டு 2003-ம் ஆண்டு ரஷியாவைச் சேர்ந்த யூரி மலென்சென்கோ விண்வெளியில் திருமணம் செய்து கொண்டார். இதன் மூலம் விண்வெளியில் திருமணம் செய்து கொண்ட முதல் நபர் என்ற பெருமையை பெற்றார்.