current_affairs

தமிழகம்

1.கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற வேண்டும் என்பதற்காக தேர்தல்களில் வேட்புமணு தாக்கல் செய்து வருகிறார் மேட்டூரை அடுத்த குஞ்சாண்டியூரை சேர்ந்தவர் பத்மராஜன்.இவர் தற்போது உள்ளாட்சி தேர்தலுக்கு வேட்புமனு  செய்ததுடன் மொத்தம் 176வது முறை தேர்தலில் வேட்பு மணு தாக்கல் செய்து உள்ளார்.

இந்தியா

1.வழக்குரைஞர்களை மூத்த வழக்குரைஞர்களாக நியமிப்பது தொடர்பான முடிவெடுக்கும் அதிகாரம், நீதிபதிகளிடமே தொடர்ந்து இருக்கும் என்று உச்ச நீதிமன்றம் அதிரடியாக தெரிவித்துள்ளது.பொதுநல வழக்கில் உச்ச நீதிமன்றம் இவ்வாறு உத்தரவு பிறப்பித்துள்ளது.
2.மத்திய அரசு ரயில்வே துறைக்கு ரயில்களில் பயோ-கழிப்பறைகள் கட்டுவதற்கும், ரயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்துவதற்கும் ரூ.1,656 கோடி நிதியை வழங்கியுள்ளது.

உலகம்

1.இன்று உலக மனநல தினம் (World Mental Health Day).
இந்தியாவில் 15 சதவீதம் பேர் மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என இந்திய மன நல மருத்துவக்கழகம் தெரிவிக்கிறது. மனிதனின் மன ஆரோக்கியம் மற்றும் உலக நல்லெண்ணத்திற்காகவே உலக மனநல தினம் கொண்டாடப்படுகிறது. மனநலத்தில் ஏற்படும் பாதிப்புகளை மக்களிடம் விளக்குதல், முறையாக மருத்துவ ஆலோசனை எடுத்துக்கொள்ள வேண்டும் போன்ற விழிப்புணர்வு ஏற்படுத்தவே இத்தினம் கொண்டாடப்படுகிறது.
2.உலக மரண தண்டனை எதிர்ப்பு தினம் (World Day Against the Death Penalty).
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 10ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. மரண தண்டனைக்கு எதிரான உலகக் கூட்டமைப்பு என்ற அமைப்பு இந்நிகழ்வை முன்னெடுத்து வருகிறது. பெரும்பாலான நாடுகளில் தற்போது மரண தண்டனை வழங்கப்படுவதில்லை. குற்றம் புரிந்தவர்களுக்கு அளிக்கப்படும் தண்டனைகளில் மிக கொடுமையான தண்டனையான மரண தண்டனையைக் கொண்டுள்ள சில நாடுகளும் அதைக் கைவிட வேண்டும் என்ற நோக்கிலே “மரண தண்டனை எதிர்ப்பு நாள்” கடைபிடிக்கப்படுகிறது.
2002 மே 13 இல் ரோம் நகரில் கூடிய “மரண தண்டனைக்கு எதிரான உலகக் கூட்டமைப்பு” என்ற அரச சார்பற்ற அமைப்புகளின் கூட்டத்தில் மரண தண்டனையை ரத்து செய்யவும், மரண தண்டனை எதிர்ப்பு இயக்கத்தை வளர்க்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின் 2003 அக்டோபர் 10 மரண தண்டனை எதிர்ப்பு நாளாக அறிவிக்கப்பட்டது.

விளையாட்டு

1.மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் நடைபெற்று வரும் நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 211 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.இதன் மூலம் டெஸ்ட் போட்டியில் கேப்டனாக இருந்து இரட்டை சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார்.
2.ரஷிய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற தால் நினைவு சர்வதேச செஸ் போட்டியில் ரஷியாவின் இயான் நெபோம்நியாக்ஷி சாம்பியன் பட்டம் வென்றார்.நெதர்லாந்தின் அனிஷ் கிரி இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.ஆனந்த், லெவோன் ஆரோனியன் ஆகியோர் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளனர்.

தினம் ஒரு மாவட்டம் சிறப்பு செய்திகள்

15.இன்று திண்டுக்கல் மாவட்டம்.

திண்டுக்கல் மாவட்டத்தில், திண்டுக்கல், பழனி, ஒட்டஞ்சத்திரம், கொடைக்கானல், ஆத்தூர் ஆகிய வட்டங்கள் கொங்கு நாட்டையும், நிலக்கோட்டை, நத்தம் வட்டங்கள் பாண்டிய நாட்டையும் சேர்ந்தன.1985-ஆம் ஆண்டில் மதுரை மாவட்டத்திலிருந்து திண்டுக்கல் மாவட்டம் உருவாக்கப்பட்டது.திண்டுக்கல் மாவட்டம் பலகாலம் மதுரை மாவட்டத்துடன் இணைந்திருந்தது. இதனால் மதுரை மாவட்டத்தின் வரலாற்றுச் சிறப்புகள் திண்டுக்கல் மாவட்டத்திற்கும் பொருந்தும்.திண்டுக்கல் தொன்று தொட்டு சேரர் மற்றும் பாண்டியர் ஆட்சியில் இருந்து வந்தது. குறிப்பாக விஜய நகர ஆட்சியில்தான் ஏற்றம் பெற்றது. வெவ்வேறு ஆட்சிகளில், படிப்படியாக இவ்வூர் சிறந்த ராணுவத்தளமாக முன்னேறியது. நாயக்க மன்னர்கள், ஆர்க்காட்டு நவாபுகள், மைசூர் மன்னர்கள், ஆங்கிலேயர் ஆகியோரால் இங்குள்ள கோட்டை பலவாறாகப் பலப்படுத்தப்பட்டது. இக்கோட்டையை வெற்றி கொள்ள, இவர்கள் ஒவ்வொருவரும் மாறிமாறிப் போரிட்டதை வரலாற்றால் அறிகிறோம். பாண்டிய நாட்டை அதன் பல இன்னல்கள் இடையூறுகளிலிருந்து தடுத்துக் காப்பாற்றியது திண்டுக்கல். திண்டுக்கலில் உள்ள ஹைதர் அலியால் கட்டப்பட்ட கோட்டை  குறிப்பிடத்தக்க ஒன்று.
காரணப் பெயர் கொண்ட ஊர்களில், திண்டுக்கல்லும் ஒன்று. ஊரின் நடுவே திண்டைப் போல் பெரிய மலை இருந்ததால் ‘திண்டுக்கல்’ என்று பெயர் வந்ததாக கருதலாம். இதற்கு முன் இருந்த பெயர் திண்டீஸ்வரம். இது புராணப் பெயர். திண்டி என்ற மன்னன் இந்நகரை ஆண்டபோது, மக்களை துன்புறுத்தினார். மக்கள் ஈசனை வேண்டி தவம் புரிந்தனர். திண்டி மன்னனை சிவனாகிய, ஈஸ்வரன் அழித்ததால் இந்த ஊர் திண்டீஸ்வரம் என்று அழைக்கப்பட்டது என்றும் சிலர் கூறுகின்றனர்.
‘திண்டு’ அதாவது ‘தலையணை’ போன்று திண்டுக்கல் மலைக்கோட்டை உள்ளதாலும் மற்றும் மலைக்கோட்டை முழுவதும் கல்லால் ஆனதாலும் ‘திண்டு’ , ‘கல்’ ஆகிய இரண்டு வார்த்தைகள் சேர்ந்து திண்டுக்கல் என்றானது. அதாவது நகரத்தை நோக்கி காணப்படும் வெறுமையான மலைகளை இது குறிக்கும் விதத்தில் இப்பெயர் வந்ததாகவும் கூறப்படுகிறது.
வடக்கில் ஈரோடு மற்றும் கரூர் மாவட்டங்களும், கிழக்கில் திருச்சிராப்பள்ளி மாவட்டமும், தெற்கு-தென்கிழக்கில் மதுரை மாவட்டமும், தென்மேற்கில் தேனி மாவட்டமும், மேற்கில் கேரள மாநிலமும் கோயம்புத்தூர் மாவட்டமும் இம்மாவட்டத்தின் எல்லைகளாக அமைந்துள்ளன.
திண்டுக்கல் மாநகராட்சி இந்தியாவின் மாநிலமான தமிழகத்தின் மாவட்டமான திண்டுக்கல்லில் உள்ள மாநகராட்சியாகும். மாநிலத்தின் 11–வது மாநகராட்சியாக திண்டுக்கல் 2014 ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி தரம் உயர்த்தப்பட்டது.
இந்த மாவட்டத்தின் மிகவும் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக கொடைக்கானல் திகழ்ந்து வருகிறது. இதுதவிர முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி இந்த மாவட்டத்தில்தான் அமைந்துள்ளது.