இந்தியா

1.கேரள காவல் துறை தலைவராக (டிஜிபி) சென்குமார் கடந்த மே 6-ஆம் தேதி மீண்டும் பதவியேற்றுக் கொண்டார்.
2.திருமலை திருப்பதி தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரியாக மூத்த ஐஏஎஸ் அதிகாரி அனில் குமார் சிங்கால் கடந்த மே 6-ஆம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார்.
3.பாரத் சேவாஸ்வரம் அமைப்பின் நூற்றாண்டு விழா மேகாலயா தலைநகர் ஷில்லாங்கில் நடைபெற்று முடிந்துள்ளது.
4.கொல்கத்தாவில் கடந்த 38 ஆண்டுகளாக ஏழைகளுக்கு இலவச மருத்துவ சிகிச்சையும், கல்வியும் வழங்கி வரும் டாக்டர். ஜாக் பிரெகருக்கு ( Dr. Jack Preger ) சிறந்த மனிதநேயருக்கான ஆசியர் விருது வழங்கப்பட்டுள்ளது.இவர் Calcutta Rescue ( கொல்கத்தாவை காப்போம் ) என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகின்றார்.டாக்டர். ஜாக் பிரெகர் இங்கிலாந்தில் பிறந்தவர் ஆவார்.


உலகம்

1.சீனாவின் பிரபல ‘வீ சாட்’ (WeChat) எனும் சமூக ஊடக செயலியை ரஷ்யா தடை செய்துள்ளது.
2.பிரான்ஸில் அதிபர் பிரான்காயிஸ் ஹொலாந்தே பதவிக் காலம் முடிவடைந்த நிலையில் நடைபெற்றுள்ள தேர்தலில் , புதிய அதிபராக எம்மானுவேல் மக்ரோன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.இந்த வெற்றி மூலம் பிரான்ஸின் இளம் அதிபர் என்ற பெருமை 39 வயதான எம்மானுவேல் மக்ரோனுக்கு கிடைத்துள்ளது.
3.Women Who Work என்ற புத்தகத்தை அமெரிக்க அதிபர் ட்ரம்பின் மகள் இவான்கா ட்ரம்ப் எழுதியுள்ளார்.
4.முற்றிலும் சீனாவில் தயாரிக்கப்பட்ட C – 919 பயணிகள் விமானத்தின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது.இந்த விமானத்தில் 168 பேர் வரை பயணிக்கலாம்.


இன்றைய தினம்

1.கொலம்பஸ் புதிய உலகிற்கான தனது கடைசிப் பயணத்தை (1502-1504) ஸ்பெயினில் இருந்து தொடங்கிய நாள் 09 மே 1502.
2.குதிரையால் செலுத்தப்படும் உலகின் முதலாவது பயணிகள் வண்டி பம்பாய் நகரில் அறிமுகப்படுத்தப்பட்ட நாள் 09 மே 1874.
3.ஆஸ்திரேலியாவின் முதலாவது நாடாளுமன்றம் மெல்போர்னில் திறந்துவைக்கப்பட்ட நாள் 09 மே 1901.
4.காரைக்குடியில் அழகப்பா பல்கலைக்கழகம் தொடங்கப்பட்ட நாள் 09 மே 1985.

 

– தென்னகம்.காம் செய்தி குழு