இந்தியா

1.ரயில் நிலையங்களில் உணவகங்கள் நடத்துவதற்கு மகளிருக்கு 33 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கும் புதிய கொள்கை அமல்படுத்தப்பட உள்ளதாக ரயில்வே துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
2.மணிப்பூர் மற்றும் உத்தரப் பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற இறுதிக்கட்டத் தேர்தல்களில் மணிப்பூரில் 86 சதவீத வாக்குகள் பதிவாகின.உத்திர பிரதேசத்தில் 60 சதவீத வாக்குகள் பதிவாகின.


உலகம்

1.ஐ.நா.சார்பாக நியூயார்க்கில் மார்ச் 11 மற்றும் 12ல் நடைபெறும் பெண்கள் தின விழாவில், தமிழகத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி மாளவிகா சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள உள்ளார்.
2.டைம்ஸ் நாளிதழ் வெளியிட்ட 2017ம் ஆண்டுக்கான உலகின் 10 சிறந்த சிறிய பல்கலைக்கழகங்களின் பட்டியலில், முதன்முறையாக பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் இன்ஸ்டிடியூட் [ The Indian Institute of Science, Bangalore (IISc) ] 8வது இடத்தை பிடித்துள்ளது.முதல் இடத்தை California Institute of Technology (Caltech), USA. பிடித்துள்ளது.
3.டிரான்ஸ்பரன்ஸி இண்டர்நேசனல் அமைப்பு வெளியிட்ட பட்டியலில், ஆசியா – பசுபிக் பிராந்தியத்தில் உள்ள 16 நாடுகளில் ஊழல் மிகுந்த நாடாக இந்தியா முதல் இடத்தை பிடித்துள்ளது.வியட்நாம் இரண்டாவது இடத்தையும்,  ஜப்பான் கடைசி இடத்தையும் பிடித்துள்ளது.
4.அமெரிக்காவின் பிரவுன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் வாடிக்கையாளரிடம் கேள்வி கேட்கும் “ரோபோ” க்களை தயாரித்து சாதனை புரிந்துள்ளனர்.


விளையாட்டு

1.இந்திய கிரிக்கெட் அணியின் புதிய விளம்பரதாரராக OPPO நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.2017 ஏப்ரல் முதல் 2022 மார்ச் வரை OPPO நிறுவனம் புதிய விளம்பரதாரராக இருக்கும்.
2.ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் இந்தியாவின் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் முதலிடத்தைப் பிடித்துள்ளனர்.இரு சுழற்பந்து வீச்சாளர்கள் ஒரே நேரத்தில் தரவரிசையில் முதலிடத்தைப் பிடிப்பது இதுவே முதல்முறையாகும்.மேலும் ஜடேஜா, தரவரிசையில் முதலிடத்தைப் பிடிப்பது இதுவே முதல்முறையாகும்.


இன்றைய தினம்

1.இன்று உலக சிறுநீரக தினம் (World Kidney Day).
உடலுக்கு மூளை, இதயம் எப்படி மிக முக்கியமோ அதுபோல் சிறுநீரகமும் மிகமிக முக்கியமானது. சிறுநீரகம் செயல்படவில்லை என்றால் வாழ்க்கையே கேள்விக்குறியாகிவிடும். ஆகவே சிறுநீரகத்தைப் பாதுகாக்கவும், நோய்வராமல் தடுக்கவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் உலக சிறுநீரக தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் இரண்டாவது வியாழக்கிழமை கொண்டாடப்படுகிறது.
2.பார்பி பொம்மை விற்பனைக்கு வந்த நாள் 09 மார்ச் 1959.
3.சனியின் துணைக்கோளான என்செலாடசில் திரவ நிலையில் நீர் கண்டுபிடிக்கப்பட்ட நாள் 09 மார்ச் 2006.
4.விளாடிமிர் லெனினுக்கு மூன்றாம் தடவையாக மாரடைப்பு ஏற்பட்ட நாள் 09 மார்ச் 1923.

 

– தென்னகம்.காம் செய்தி குழு