தமிழகம்

1.சமூக நலன் சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு மேன்மையாக பணிபுரிந்த 18 வயதுக்கு மேற்பட்ட மகளிருக்கு ஒளவையார் விருது மகளிர் தின விழாவில் தமிழக அரசால் வழங்கப்படுவது வழக்கம்.அந்த வகையில் ஒளவையார் விருது பெற தங்களை பற்றிய முழு விபரங்களை “மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், சிங்காரவேலர் மாளிகை, சென்னை-1” என்ற முகவரிக்கு பிப்ரவரி 15-க்குள் அனுப்பி வைக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் ப.மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.


இந்தியா

1.சிகிச்சை அளிப்பதற்கு முன்பே அதுதொடர்பான கட்டண விவரங்களை நோயாளிகளுக்கு மருத்துவர்கள் தெரிவிக்க வேண்டியது கட்டாயம் என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு கடந்த பிப்ரவரி 7-ஆம் தேதி  தெரிவித்துள்ளது.
2.பொதுமக்கள் வருகின்ற 20-ஆம் தேதி முதல் தங்கள் சேமிப்பு கணக்கில் இருந்து இனி வாரம் ரூ.50 ஆயிரம் பணம்  எடுக்கலாம் என்று ஆர்.பி.ஐ அறிவித்துள்ளது.
3.மகாராஷ்டிரா மாநில அரசின் சார்பில், நகர எல்லைக்கு வெளியே பொது போக்குவரத்தை மேம்படுத்த, 6 பேர் பயணிக்க கூடிய ஷிவ்கிராமின் டாக்ஸி திட்டம் (Shivgramin Taxi Scheme)  தொடங்கப்பட்டுள்ளது.


விளையாட்டு

1.தில்லியில் நடைபெற்ற ஃப்ரெண்ட்ஸ் பிரீமியர் லீக் டி20 உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் ஆட்டமிழக்காமல் 300 ரன்கள் எடுத்த  உலகின் முதல் வீரர் என்ற சாதனையை தில்லியைச் சேர்ந்த மோஹித் அலாவத் (21) படைத்துள்ளார்.இவர் ஃப்ரெண்ட்ஸ் லெவன் அணிக்கு எதிராக மாவி லெவன் அணி தரப்பில் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.
2.பாகிஸ்தான் ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்த அசார் அலி தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார்.


இன்றைய தினம்

1.முதலாவது ஜப்பானியர் ஹவாய் தீவை வந்தடைந்த நாள் 09 பிப்ரவரி 1885.
2. டேவிஸ் கோப்பை டென்னிஸ் பந்தயம் ஆரம்பிக்கப்பட்ட நாள் 09 பிப்ரவரி 1900.
3.அப்பல்லோ 14 விண்கலம் மூன்று அமெரிக்கர்களுடன் பூமி திரும்பிய நாள் 09 பிப்ரவரி 1971.
4.சோயூஸ் 17 விண்கலம் பூமி திரும்பிய  09 பிப்ரவரி 1975.

 

– தென்னகம்.காம் செய்தி குழு