Daily-Current-Affairs

தமிழகம்

1.கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட துறைகளில் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் முன்னோடித் திட்டங்களால் நாட்டிலேயே மிக முன்னேறிய மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தைப் பிடித்து சாதனைபடைத்துள்ளதற்காக இந்தியா டுடே விருது  வழங்கியுள்ளது.மேலும் இந்த வரிசையில் கேரளா இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.
2.முதன்முறையாக துபாய் விமான நிலையத்தில் தமிழில் அறிவிப்பு வெளியிடும் முறை தொடங்கப்பட்டுள்ளது.

இந்தியா

1.கிருஷ்ணா-கோதாவரி ஆற்றுப்படுகையில் மேற்கொண்ட இயற்கை எரிவாயு உற்பத்திப் பணிகளில் தேவையற்ற இழப்பீடு ஏற்படுத்தியதற்காக ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திற்கு ரூ.10,500 கோடி அபராதம் விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

உலகம்

1.அமெரிக்காவின் 45-ஆவது அதிபராக குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்பு இன்று வெற்றி பெற்றுள்ளார்.
2.வடகொரிய தலைநகர் பியாங்யாங்கில் சூரிய சக்தியில் இயங்கும் படகு சேவை வசதி தொடங்கப்பட்டுள்ளது.இதற்கு Okryu என பெயரிடப்பட்டுள்ளது.இது முற்றிலும் உள்நாட்டு தயாரிப்பில் உருவாக்கப்பட்டது.
3.வட அமெரிக்க நாடான நிகராகுவாவில் டேனியல் ஓர்டேகா மூன்றாவது முறையாக அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
4.கடந்த வாரம் நேபாள் சுற்றுப்பயணம் சென்ற ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு காத்மாண்டு பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது.

விளையாட்டு

1.பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்ற பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் பிரிட்டன் வீரர் ஆன்டி முர்ரே சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.இவர் அமெரிக்காவின் ஜான் இஸ்னரை 6-3, 6-7(4/7), 6-4 என்ற செட் கணக்கில் தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.