தமிழகம்

1.சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கெளல் தலைமையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு இன்று இரங்கல் கூட்டம் நடைபெற உள்ளது.
2.மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு பள்ளிகளில் இன்று அஞ்சலி செலுத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
3.இஸ்லாமியர்கள் கொண்டாடும் மிலாது -நபி பண்டிகை வரும் 12 -ஆம் தேதிக்கு பதிலாக வரும் 13 -ஆம் தேதி கொண்டாடப்படும்  என்றும் அன்றைய தினம் அரசு விடுமுறை என்றும் மாநில அரசு  அறிவித்துள்ளது. முன்னதாக தமிழக அரசின் நிகழாண்டுக்கான விடுமுறைப் பட்டியலில் மிலாது நபி வரும் 12 -ஆம் தேதி கொண்டாடப்படும் என அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
4.தமிழறிஞர் ச.சாம்பசிவனார் (88) மதுரையில் டி.எஸ்.பி. நகர் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று காலமானார்.


இந்தியா

1.சத்ரபதி சிவாஜி டெர்மினஸ் மற்றும் சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தின் பெயரை மராத்திய போர்வீரன் சத்ரபதி சிவாஜி மகாராஜ் என்று அழைக்க மகாராஷ்டிரா அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
2.திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலுக்குள் பெண்கள் சுடிதார், சல்வார் கம்மீஸ் அணிந்துவர கேரள உயர்நீதிமன்றம் தடை விதிப்பதாக உத்தரவிட்டுள்ளது.
3.உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிப்பிற்கு பிறகு புதிதாக 1,900 கோடி கரன்சி நோட்டுகள் வெளியிடப்பட்டுள்ளன என்று ரிசர்வ் வங்கியின் ஆளுநர் உர்ஜித் படேல்  தெரிவித்துள்ளார்.
4.ரயில், மெட்ரோ ரயில், அரசு போக்குவரத்துக் கழக பேருந்து ஆகியவற்றில் டிசம்பர் 10-ஆம் தேதி வரை மட்டுமே பழைய ரூ.500 நோட்டு செல்லுபடியாகும் என்று மத்திய அரசு நேற்று தெரிவித்துள்ளது.


உலகம்

1.மியான்மர் அரசு தனது அண்டை நாடான மலேசியாவிற்கு ரோஹிங்யா முஸ்லிம்கள் விவகாரத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து தனது நாட்டைச் சேர்ந்தவர்கள் அந்நாட்டுக்குச் சென்று பணியாற்றுவதற்கு மியான்மர் அரசு தடை விதித்துள்ளது.
2.ஆப்கானிஸ்தானில் அகதிப்பெண்ணான கேப்டன் சபியா பெரோஷி  விமானப்படை விமானியாக உள்ளார்.மேலும் இவர் ஆப்கானிஸ்தான் 2 ஆவது பெண் விமானி என்ற பெருமையை பெற்றுள்ளார்.


விளையாட்டு

1.தாய்லாந்தில் நடைபெற்ற ஆறு நாடுகள் பங்கேற்ற பெண்கள் ஆசிய கோப்பை ‘டுவென்டி – 20’ கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா கோப்பையை வென்றது நினைவிருக்கலாம். இப்போட்டியில் மிதாலி ராஜ் ஆட்ட நாயகி மற்றும் தொடர் நாயகி விருது வென்றுள்ளார்.
2.தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுவதால் சென்னையில் வருகிற 10 மற்றும் 11-ந் தேதிகளில் நடைபெற இருந்த கீழ்மட்ட அளவிலான டிவிசன் லீக் கிரிக்கெட் ஆட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளர் காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.


முக்கிய தினங்கள்/வாரங்கள்

1.இன்று சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம் (International Anti-Corruption Day).
ஊழல் அனைத்து நாடுகளிலும் இருக்கிறது. இந்தியாவில் கடந்த ஆண்டு வேலையை முடிக்க இரண்டில் ஒருவர் லஞ்சம் கொடுக்கிறார் என்று டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் அமைப்பின் ஆய்வு கூறுகிறது. ஊழல் நாட்டின் வளர்ச்சி வேகத்தைக் குறைக்கிறது. இலக்குகளை அடைவதற்குத் தடையாக உள்ளது. ஊழலற்ற சமுதாயத்தை படைக்க ஐ.நா. 2000ஆம் ஆண்டில் இத்தினத்தை அறிவித்தது.
2.பெரியம்மை நோய் முற்றிலும் அழிக்கப்பட்டதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்த நாள் 09 டிசம்பர் 1979.
3.நியூயோர்க் நகரின் முதலாவது நாளிதழ் “தி அமெரிக்கன் மினேர்வா” வெளியிடப்பட்ட நாள் 09 டிசம்பர் 1793.
4.போலந்தின் முதலாவது அதிபராக ‘கப்ரியேல் நருட்டோவிச்’ தேர்வு செய்யப்பட்ட நாள் 09 டிசம்பர் 1922.
5.இந்திய சட்டசபை ராஜேந்திர பிரசாத் தலைமையில் அமைக்கப்பட்ட நாள் 09 டிசம்பர் 1946.